Related posts

Breaking News

மேகத்தினைத் துரத்தியவன்

வணக்கம்,
                        இரவில் பகலில் என்னேரமானாலும்
                        சிரமத்தை பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
                        சுற்றுவேன் தங்களுக்கு ஓர் துன்பம் வராமற் காப்பேன்
                        கற்ற வித்தையேதுமில்லை காட்டு மனிதன் ஐயே!
                                                                                                                                  -பாரதி
என்ற வரிகளுடன் தொடங்கும் நாவல் தான் சுஜாதாவின் 'மேகத்தை துரத்தியவன்'.


  நான் பிறப்பதற்கு 18 வருடங்களுக்கு முன்னர் "மாலைமதி" என்னும் இதழில் வெளியான நாவல். அன்பழகன் வேலை இல்லா பரதேசி(இவரையும் ஆங்கிலத்தில் V.I.P எனலாமா?)தனக்கு என ஒரு குடும்பம் அற்றவன்,வசிப்பதோ  சித்தப்பா வீட்டில்.காலையில் காப்பி போடுதல்,ரேஷன் வாங்கி வருதல்,சமைத்தல்,துவைத்தல்,சித்தப்பாவின் மகளை ஸ்கூலுக்கு அழைத்து சென்று வருதல் போன்ற சகலவிதமான சில்லறை வேலைகளுக்கும் நாடவேண்டிய ஒரே இடமாக திகழ்பவன்.
அன்புவின் சித்தப்பா விநாயகம் 'பாங்கில்' வேலை செய்பவர்,வழமையான சித்தப்பாக்களின் வயதும் பழக்கங்களும்  உடையவர்.சித்தி வேலை செய்வது சர்க்கார் ஆபிசில்.சித்தியின் தங்கை ரத்னா அவ்வப்போது கதைக்குள் எட்டி பார்ப்பவள்.இவர்களுக்கு ஒருகுழந்தை.அன்புவின் நிதி நிலைமையையும்,அதனால் உண்டாகும் மனநிலையையும் விளக்க இதோ கதையில் இருந்து ஒரு பத்தி;

'சித்தி,ஒரு ரூபா கொடுங்க.'

'எதுக்கு அன்பு?'

'சைக்கிளுக்குக் காத்து அடிக்கணும்.பத்திரிகை வாங்கணும்.'

'காத்து அடிக்க பதினஞ்சு பைசா.பத்திரிகை அம்பத்தஞ்சு பைசா.கூட்டினா எழுபது பைசா இந்தா.'

இப்படி காசுக்கு வழி இல்லாதவனுக்கு பணம் சம்பாதிக்க வழி சொல்லித்தருகிறேன் என்றான் அன்புவின் தற்காலிக,தற்செயல் நண்பன் மாணிக்கம்.எப்படி?சித்தப்பா வேலை செய்யும் வங்கியில் கொள்ளையடிப்பது, எவ்வளவு பணம்?பத்து லட்சம்.

மாணிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அன்பழகனை போதைக்கு அடிமையாக்கி அடிக்கடி பணமும் குடுத்து வங்கியில் உள்ள பாதுகாப்பு வசதிகள் முதல் சாவிகளை சோப்பில் அச்சு எடுப்பது வரை அனைத்து காரியங்களையும் செய்து கொள்கிறான்.திட்டப்படி ஒரு சுபயோக சுபதினத்தில் வங்கியை கொள்ளை அடிக்க செல்கிறார்கள்.வேலையை முடித்து வெளியே வரும்போது போலீசிடம் அகப்பட்டு கொள்கிறார்கள்.தப்பிக்க முடியாமல் ஒரு பாலத்திற்கு அருகில் மாட்டி கொள்கிறார்கள்.அவசரத்தில் மாணிக்கம் பணப்பெட்டியை ஆற்றில் எறிந்து விடுகிறான்.வங்கியை கொள்ளை அடித்ததற்காக இருவரும் கைது செய்யபடுகிறார்கள்.கோர்ட்டில் 'இவர்தாங்க என் குரு' என்று மாணிக்கம் அன்பழகனை கோர்த்து விடுகிறான்.ரத்னாவின் வேண்டுதளுக்கு இணங்க,அன்புவின் சார்பில் ஆஜர் ஆகிறார் நம்ப வக்கீல் வசந்த்.
மாணிக்கத்திற்கு எப்படி அன்புவின் தொடர்பு கிடைத்தது?சரியான நேரத்தில் போலீஸ் எப்படி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தது?பணம் எல்லாம் ஆற்றிலேயே அடித்து செல்லப்பட்டு விட்டதா?போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுகிறார் வசந்த்.அப்போ யார் அந்த மூன்றாம் நபர்?என கண்டுபிடிப்பது தான் மீதி கதை.இன்னொரு விஷயம் 'வசந்த்' என்றவுடன் என் கண் முன்னே இவர் தோன்றுவது ஏனோ?



10 comments:

  1. அருமையான பதிவு..
    தொடர்ந்து. எழுதுங்கள்

    ReplyDelete
  2. அதிரடி பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  3. அதிரடி பதிவுகள் தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அருமை...அருமை

    ReplyDelete

//]]>