Related posts

Breaking News

இரு மனிதர்களும் இரு கதைகளும்...


 மனித ரூபத்தில் இருக்கும் ஒரு  அரக்கன் அவன்.மக்கள் பலரின் அதீத வெறுப்புக்கு  உள்ளானவன்.ஒரு கொலைகாரன்.அவனது பெயர்  திரு.ஹைடு.பலருக்கு தீமையை தோற்றுவிக்கும் இவனுடைய இருப்பிடம் யாருக்கும் தெரியாது.இன்னொரு மனிதர் டாக்டர்.திரு.ஜெகில்.அந்நகரின் பிரபலமான நற்குணம் கொண்ட ஒரு வைத்தியர்.ஹைடு செய்த கொலை வழக்கை பற்றி ஆராய்கிறார் திரு .அட்டேர்சன்.டாக்டர் ஜெகிலுக்கும் ஹைடுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்  திரு.அட்டேர்சன்.இந்நேரத்தில் டாக்டர்.திரு.ஜெகிலும் மரணமடைகிறார்.ஏன் டாக்டர் ஜெகில் ஹைடு போன்ற ஒருவருடன் பழக்கம் வைத்துள்ளார்?டாக்டர்.திரு.ஜெகிலின் மரணத்திற்கு யார் காரணம்?ஹைடை சிறை பிடித்தனரா?என்ற முடிச்சுகளை கட்டவிழ்பதே உலக புகழ் பெற்ற ரொபெர்ட் லூயி ஸ்டீவன்சனின் "டாக்டர்.திரு.ஜெகில் மற்றும் திரு.ஹைடின் வினோதமான வழக்கு"(Strange Case of Dr Jekyll and Mr Hyde)என்னும் நாவலின் கதை சுருக்கம் ஆகும்.

இந்நாவலின் மையக்கருவை ஒத்து வெளி வந்ததுதான் சுஜாதாவின் "விளிம்பு" என்னும் குறு நாவல்.
சாரதி என்னும் ஒருவனை சுற்றியே அக்கதை நிகழ்கிறது.சாரதி ஒரு அம்மாஞ்சி,மாச சம்பளக்காரன், கடவுளுக்கே கடிதம் எழுதுபவன்,கொலை செய்ய போகிறான்.யாரை?தன்னுடன் வேலை பார்க்கும் விஜயன் என்பவனை,எதற்காக?தன்னை மன உளைச்சல் படித்தியதற்காக...அவர்களது அலுவலகத்தினர் குறிஞ்சி நிலத்திற்கு சுற்றுலா செல்கின்றனர்.அங்கே ஒரு மலையில்  இருந்து தள்ளி விஜயனை கொல்வதுதான் சாரதியின் திட்டம்.அனைவரும் சுற்றுலா பிரதேசத்தை சுற்றி பார்த்துகொண்டிருக்க சாரதியோ விஜயனை மெதுவாக பேச்சு கொடுத்து தனியாக அழைத்து செல்கிறான்.சந்தர்பம் பார்த்து விஜயனை தள்ளியும் விடுகிறான்.ஆனால் விஜயனோ சாரதியை இறுக பிடித்து கொள்ள இருவருமாக கைலாயம் செல்கின்றனர்.

அட இரு கதைக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?கடைசி வரியில் 'ட்விஸ்ட்' வைப்பதுதான் சுஜாதாவின் பாணி.இதோ அக்கதையின் இறுதி வரிகள் உங்களுக்காக

இன்ஸ்பெக்டர் "ஒதுங்குங்கைய்யா,ஒதுங்குங்க.இந்த ஆள் உங்க பார்ட்டி கூட வந்தவரா...?என்றார்.
"ஆமாங்க".
"பேர் என்ன?"
"விஜய சாரதீங்க"

பி.கு:- தம்பி LMS இன்னும் வரல.

       

No comments

//]]>