The Killing Joke..!(கொல்லும் விகடம்..!)

6:13 PM Kavinth Jeev 14 Comments

The Killing Joke-front cover

வணக்கம் நண்பர்களே,
                                            இன்று நாம் பார்க்கப்போவது 1988இல் (DC)வெளியான 'The Killing Joke' என்னும் கிராபிக் நாவலை பற்றியே..!சிறந்த காமிக்ஸ்களுக்கு வழங்கப்படும்  Eisner Award என்னும் விருதை இது அவ்வாண்டு பெற்றுக்கொண்டது.'Brian Bolland' என்பவர் ஓவியங்களை செதுக்க 'ஆலன் மூர்' என்னும் ஜாம்பவான் இக்கதையை எழுதியுள்ளார்.Dark Knight' படத்தை போலவே இக்கதைக்கும் நாயகன் ஜோக்கரே..!


இக்கதை நமது "திகில்" காமிக்ஸில் "சிரிக்கும் மரணம்" என்ற பெயரில் வெளிவந்துள்ளது


ஒரு மனநலமருத்துவமனையில் ஆரம்பிக்கிறது
இக்கதை.சிறைப்பிடிக்கபட்டிருக்கும்  ஜோக்கரை காண அங்கு செல்கிறார் பேட்மேன். அவனுடன் பேச்சு வார்த்தை நடத்தும் பேட்மேன் "தொடர்ந்து நீ இவ்வாறு குற்றங்கள் புரிந்து கொண்டு இருந்தால்,ஒன்று நான் இறப்பேன் அல்லது நீ இறப்பாய்.இதில் ஒன்று நடை பெறுவது உறுதி"என .கூறுகிறார். எதிர் தரப்பில் இருந்து ஒரு பதிலும் இல்லை.அப்போதுதான் தன் எதிரில் இருப்பவன் ஜோக்கர் இல்லை ஒரு போலி என்பதை தெரிந்து கொள்கிறார்.அடுத்த குற்றத்திற்காக திட்டங்களை தீட்டும் ஜோக்கர் தன் இறந்த காலத்தையும் அலசிக்கொண்டே செல்கிறான்.தான் திறமையான நகைச்சுவை கலைஞனாய் இருந்தும்  தான் அத்துறையில் ஒதுக்கப்பட்டதையும்,தானும் தன் மனைவியும் ஏழ்மையில் வாடியதையும்,தனது ஏழ்மையை போக்க இரசாயன தொழிற்சாலை ஒன்றில் கொள்ளை அடிக்க ஒத்துகொண்டதையும்,அத்தருணத்தில் மின்விபத்தில் தன் மனைவி இறந்ததையும் இருப்பினும் தன்னை  பலவந்தமாக கொள்ளை அடிக்க வைத்ததையும்,கொள்ளை அடிக்க சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் தன் புறமுகமும் அகமுகமும் மாற்றப்பட்டதையும் நினைவுகூர்கிறான்.தனக்கு வந்த அந்த கொடிய நாள் தன்னை சிறை பிடிக்க துடிக்கும் கமிஷனர் கோர்டன் அவர்களுக்கும் வரவேண்டும் என எண்ணுகிறான். கமிஷனர் கோர்டானை கடத்தி உடல்,உள ரீதியாக மிகுந்த சித்திரவதை செய்கிறான்.அவனது எண்ணம் ஒரு மோசமான நாள் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பதே!
இறுதியில் கமிஷனரை சிறை மீட்கும் பேட்மேன் ஜோக்கரை எதிர் கொள்கிறான்.ஜோக்கரை வீழ்த்தும்  பேட்மேன்
தான் அவனை குணப்படுத்துவதாக கூறுகிறான்.அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை உணர்த்த ஜோக்கர் ஒரு கதை சொல்கிறான்.அக்கதையில் வரும் மனநலமற்றவர்களாக தன்னையும் ஜோக்கரையுமே குறிப்பிடுகிறான் என உணரும் பேட்மேன் புன்னகைப்பதோடு கதை நிறைவுறுகிறது.

பி.கு:- இம் மொழிப்பெயர்ப்பு மூலம் சிரிக்கும் மரணத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் அடியேனின் மொழிப்பெயர்ப்பும் ஓரிரு இடங்களில் இடம் பெற்று உள்ளது.உ+ம்:-1வது படம், ஓரிரவு,தொலைவில் இருக்கும்(சினிமா டைட்டிலா வைக்க ஏத்த பெயருக)போன்ற இடங்கள்.எனவே குறைகள் இருப்பின் கூறவும்.
இப்பதிவை எழுத உதவிய Karthick Somalinka அவர்களுக்கு என் நன்றிகள்.இக்கதை பற்றிய விரிவான விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்கவும்.Bladepediaவில் இடம் பெற்ற பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்.14 comments:

 1. இப்புத்தகத்தைப் பற்றிய நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி காவிந்த்! எனது மறுவாசிப்புப் பட்டியலில் இதற்கு முக்கியமான இடம் இருக்கிறது! நேரம் அமையும் போது படித்து விட்டு என் கருத்துக்களைப் பகிர்கிறேன்!

  //குறைகள் இருப்பின் கூறவும்//
  ரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள். குறைகள் என்றில்லை.. ஆனால், நூல் விமர்சனம் / அறிமுகம் செய்யும் போது கதைச் சுருக்கத்தோடு நில்லாமல், கதை பற்றிய உங்கள் எண்ணங்களையும், அது உங்களை ஏன் கவர்ந்தது போன்ற விபரங்களையும் பகிருங்கள். அது பதிவின் சுவாரசியத்தைக் கூட்டும்!

  பி.கு.: முடிந்தால் Word Verification-ஐ எடுத்து விடுங்கள்! :)

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே,
  நண்பர் கார்த்திக் சொமளலிங்கா-வின் நீண்ட
  பதிவை உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்...!
  நண்பர் ஆங்கிலத்தில் போட்ட பக்கத்தை நீங்கள்
  தமிழ்படுத்தியிருக்கிரீர்கள்...பாராட்டுக்கள்..!

  இந்த கதை திகிலில் வந்ததால் அந்த ஸ்கேனை
  போட்டிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்...!

  ReplyDelete
  Replies
  1. //நண்பர் கார்த்திக் சொமளலிங்கா-வின் நீண்ட
   பதிவை உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்...!
   நண்பர் ஆங்கிலத்தில் போட்ட பக்கத்தை நீங்கள்
   தமிழ்படுத்தியிருக்கிரீர்கள்//

   மிக தவறு my friend அவரது பதிவை நான் சுருக்கவும் இல்லை,அவர் போட்ட படங்களை தான் தமிழ் படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை.இரு பதிவுகளையும் ஒரு சேர படித்ததால் வந்த விளைவாக இருக்கும் நண்பரே..!

   Delete
 3. bladepedia linkஇல் சென்று 'திகில் ஸ்கேன்' பக்கங்களை பார்வை இடுங்கள் நண்பரே!
  இப்புத்தகம் இருந்து இருந்தால் முழுதாக ஸ்கேன் செய்திருப்பேன்...
  இந்த லிங்கில் சென்று இக்கதையின் ஆங்கில வடிவை தரவிறக்கலாம்..!
  http://filepost.com/files/md585e67/Batman_-_The_Killing_Joke_(1988)_(DC)_(c2c)_(ONW).cbr

  ReplyDelete
 4. பிளாக்கின் கறுப்பு பிண்ணனி படிக்க சிரமம் தருகிறது !

  ReplyDelete
 5. இப்போது நன்றாக படிக்க முடிகிறது !
  பிளாக் பிண்ணனி மாற்றத்திற்கு நன்றி !

  ReplyDelete
 6. பேட்மேன் கதைகளில் மிக தரமான படைப்பு இது !
  திகிலில் வந்த பேட்மேன் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கும் !

  ReplyDelete
 7. அனைத்து காமிக்ஸ் நண்பர்களின் வலைதளத்தையும் பார்வை இடுவேன் நண்பரே .உங்கள் வலை தளத்தை எப்படி தவற விட்டேன் என தெரிய வில்லை .மன்னிக்கவும் .

  தொடருங்கள் ....தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் ...

  ReplyDelete
 8. திகில் இதழ்களில் நான் அடிக்கடி மறுபதிப்பாக படிப்பது பேட் மேன் கதைகளை தான் .ஆசிரியர் மீண்டும் அவரை மீட்டு வந்தால் பல நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆழ்வார்கள் ..

  ReplyDelete
 9. நல்ல முயற்சி நண்பரே .உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்
  நன்றிகள் நண்பரே, நட்புடன்,இராஜா மயிலாடுதுறை

  ReplyDelete
 10. ்Thanks ,இராஜா மயிலாடுத
  ுறை

  ReplyDelete
 11. என்னிடமிருந்து காணாமல் போன இதழில் இதுவும் ஒன்று :( அதை மீண்டும் பார்த்த திருப்தி அளிக்கிறது உங்கள் பதிவு.

  ReplyDelete
 12. அருமையான பதிவு நண்பா ...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete