Related posts

Breaking News

Batman Arkham City-ஆர்க்ஹாம் நகரம்(2011):A Game review

வணக்கம் நண்பர்களே..!
                                நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்(மிக தாமதமான).இன்று நாம் பார்க்கப்போவது நமது ஆஸ்தான ஹீரோ பேட்மேனை மையமாக கொண்ட ஆர்க்ஹாம் நகரம்(Arkham City)என்னும் Gameன் விமர்சனத்தினையே!


இதன் முன்னைய பாகமும் முதல் பாகமுமான Arkham Asylum(அஸைலம்-மன நோய் கொண்ட கொடூரமான குற்றவாளிகளின் இருப்பிடம்)2009இல் வெளிவந்து சக்கைபோடு போட்டிருந்தது.அது ஏற்படுத்திய தாக்கத்தினால் இந்த கேம்(Arkham City)மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருந்தது.
Arkham Asylum is a fictional psychiatric hospital in the DC Universe
நகர மேயரை எதிர்த்து பேசுவதால்  ப்ரூஸ் வேய்னை கைது செய்து சிறையில் இடுகின்றனர்.ப்ரூஸ் வேய்ன் தான் பேட்மேன் என்பது தெரியாமல் அங்கிருக்கும் Dr.Hugo Strange(மருத்துவர் ஹ்யூகோ ஸ்ட்ரேஞ்ச்)Protocol 10(நம்ம ஊருல Curfew போடுவாங்களே அந்த மாதிரி)அவசர நிலையை பிரகடனப்படுத்தி நகரை தன் கட்டுக்குள் கொண்டுவரபோவதாக சொல்கிறான்(இதற்கு மேயரும் உடந்தை).திட்டங்களை தெரிந்து கொண்ட ப்ரூஸ் தன் சாமர்த்தியத்தாலும் தன் உதவியாளர் ஆல்பர்ட்டின் உதவியோடும் அங்கிருந்து தப்பிக்கிறார்.ஆனால் Protocol 10ன் முழுமையான அர்த்தம் என்ன?அது எப்போது பிரகடனப்படுத்தப்படும்?போன்ற கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியாது.அதனால் தனது எதிரியும் நண்பியுமான Cat Womenன் [கேட் வுமன்-Selina(செலினா)]உதவியை நாடலாம் என தீர்மானிக்கிறார்.ஆனால் அவளை Two Face(டூ பேஸ்)என்பவன் கடத்தி வைத்து இருக்கிறான்.அங்கிருந்து அவளை காப்பற்றும் வேளையில் பேட்மேனை  யாரோ சுடப்பார்கிறார்கள்.அது வேறு யாருமல்ல...ஹி  ஹி ஹி ஜோக்கர் தான்.ஜோக்கர் இருக்கும் கட்டிடத்தை கண்டுபிடித்து உட்சென்றால் அங்கு பல தடிமாட்டு பசங்க அவரை
சுற்றிவளைகிறார்கள்.அவர்களை அடிப்பின்னி விட்டு ஜோக்கரை பிடித்தால் மாட்டிக்கொண்டதோ பேட்மேன்..!
ஆமாம்,பேட்மேனை தான் இருக்குமிடத்திற்கு வரவழைக்கவே குறியை தவறாக வைத்தான் ஜோக்கர்.பேட்மேனை பிடித்த ஜோக்கர் அவன் உடம்பில் தனது இரத்தத்தை செலுத்திவிடுகிறான்.காரணம் ஜோக்கருக்கு வந்திருப்பது ஒரு தோல்நோய்,அந்நோயின் மருந்து Mr.Freez இடமே உள்ளது.ஆனால் ஆனால் Freezஐ penguin(பென்குவின்) என்னும் இன்னொரு வில்லன் சிறைப்பிடித்து வைத்திருக்கிறான்.பென்குவினுக்கு ஜோக்கரை வீழ்த்தி வில்லாதிவில்லன் ஆக வேண்டும் என்று ஒரு அவா..!பென்குவினை வீழ்த்தி Mr.Freezஐ சிறைமீட்டு மருந்தை பெறவேண்டும்,அது மட்டுமல்லாமல் Protocol 10ஐ முறியடிக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல் சில Side Missionsம் உண்டு.eg:Bane வைக்கும் குண்டுகளை செயலிழக்க செய்தல்.இதை உங்களுக்கு பிடித்திருந்தால் செய்யலாம் அல்லது மெயின் ஸ்டோரியையே தொடரலாம்..!
இதில் பேட்மேனுடைய பல ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை சில வில்லன்களை வீழ்த்தி அவர்களது ஆயுதங்களையும் பெற்றுகொள்ளலாம்(ஒரு கட்டத்தில் பென்குவினை வீழ்த்த Mr.Freez ஒரு ஆயுதம் கொடுப்பார்).அது மட்டுமல்லாமல் இது ஒரு Open World என்பதோடு DLC(Downloadable Content)க்களை டவுன்லோட் செய்து கேட்வுமன்,ராபின் ஆகிய பாத்திரங்களிலும் கொண்டும் விளையாடலாம்(சில episodeகளில் மாத்திரம்).

நான் இந்த Gameற்கு கொடுக்கும் Rating 4/5.கேம் பிரியர்கள் விளையாடிப் பார்க்கலாம்..!
                      
                            

No comments

//]]>