ஐ-வழக்கமான தமிழ் சினிமா இல்ல அதுக்கும் மேல

7:06 PM Kavinth Jeev 4 Comments

வணக்கம் Friends,
முதன் முதலாக நான் முதல் நாள் முதல் show பார்த்துள்ளேன்.So அதை பற்றி எழுதியே ஆக வேண்டும் என்பதால் முதன் முதலாக எனது தளத்தில் ஒரு திரைப்படத்தை பற்றிய விமர்சனத்தை எழுதுகிறேன்..!

விக்ரம்,ஷங்கர்,ஏ.ஆர்.ரகுமான்,பி.சி.ஸ்ரீராம் இன்னும் பலரின் 3வருடகால உழைப்பில்,2500 திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் தான் 'ஐ'..!
கதையை சொல்லி நான் காரியத்தை கெடுக்க நான் விரும்பவில்லை.

ஷங்கர் படங்கள் பொதுவாக இரண்டு விதமானமை.ஒன்று அது சமூகத்திற்கு கருத்து சொல்லும் படமாக இருக்கும் இதில் ஜென்டில்மேன்,இந்தியன்,முதல்வன்,சிவா
-ஜி போன்ற படங்களை இதில் அடக்கலாம்(ஏன் ரோபா கூட Sci-Fictionஐ தாண்டி பார்த்தால் ஒரு சமூக நோக்குள்ள படம்தான்).மற்றது காதலை மையமாக கொண்டவை இதில் ஜீன்ஸ்,காதலன்,பாய்ஸ் போன்றவற்றை சேர்க்கலாம்(நண்பன் ஒரு Remake படம் So அதை கருத்திற்கொள்ளவில்லை).
இது இரண்டாம் வகைக்குள் அடங்கும்.

'ஐ' எனும் தலைப்பு அழகு,விஷம் என்பதை தாண்டி 'I' எனும் ஒரு வகை Virusயும் குறித்து நிற்கிறது.
படம் ஆரம்பித்த முதல் பாதியில் திரைக்கதை வேகமாக அதே நேரம் மிகவும் Boring ஆகவும் செல்கிறது(அதாவது படத்திற்குள் ஒன்ற முடியவில்லை)!!!இரண்டாம் பாதியாவது நன்றாக இருக்குமென்று பார்த்தால் அதன் ஆரம்பமும் சலிப்பூட்டும் விதமாகவே இருந்தது...வெறுப்பின் உச்ச கட்டமாக 'என்னோடு நீ இருந்தால்'பாடல் அமைந்தது..!படம் அவ்வளவுதானா? என நினைக்கும் போதுதான் திரைக்கதை சூடு பிடிக்க தொடங்குகிறது..!

"I"என்று கம்பீரமாக நிற்கும் எழுத்து கூனி "ஐ"யாகும் போதே பாதி கதையை கூறி விடுகிறார் ஷங்கர்.ஷங்கர் என்று Titleல் போடும் போதே ரசிகர்கள் வாயில் விரலை வைத்து விடுகிறார்கள்(வேற எதுக்கு விசிலடிக்கதான்).தமிழ் சினிமாவில் இவ்வளவு கொண்டாடப்படும் இயக்குனர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்..!

ஷங்கரின் கற்பனை திறன் ஒரு பக்கம் என்றால் பி.சி சாரின் ஒளிப்பதிவு பிரம்மிக்க வைக்கிறது.ஒவ்வொரு Frameஐயும் கலர் புல்லாக கண்களுக்கு விருந்தாக படைத்துள்ளார்.விக்ரமின் உழைப்பு அபாரமானது.நன்றாக நடித்துள்ளார்...என்று கூறவும் வேண்டுமா?
எமியும் தனக்கு கொடுக்கப்ட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.


இரு Body Buildersகளை தூக்கும் காட்சி அசர வைக்கிறது எனின் ஷு லேஸ் கட்டும் காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்கிறது.நைட்டியை கட்டிக்கொண்டு ஆடுவதும் கமல்ஹாசன் போல் ரியாக்ஷ்ன்
கொடுப்பதும் என்று அனைத்தையும் அசால்டாக செய்கிறார் விக்ரம்...
விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கின்றதோ? இல்லையோ? Best Comedian of the year,Best Supporting Role of the year,Best நண்பேன்டா of the year என்று சந்தானத்திற்கு பல விருதுகள் காத்துள்ளன!!!பத்திரிகையாளராக சென்று செய்யும் சேஷ்டைகள் ரசிக்க வைக்கின்றன.இவருடன் பவர் ஸ்டாரும் இணைந்து கொண்டால் சொல்லவும் வேண்டுமா?

சண்டை காட்சிகளில் மிகவும் ரசிக்க வைப்பது Train fightதான்..!பாடல்களில் 'மெர்சலாயிட்டேன்' மற்றும் 'பூக்களே சற்று' பாடல்களும் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து...சில இடங்களில் அதிர வைக்கும் ரகுமான் சில இடங்களில் Speakerசை மட்டும் அதிர வைப்பது ஏனோ?
எந்திரன் பாணியில் அமைந்த "கடவுள் படைக்கும் போது கூட நீ இவ்வளவு அழகு இல்ல,உன்ன அவ்வளவு அழகா மாத்தி இருக்கேன்"என்ற வசனமும் "அதுக்கும் மேல" என்ற இடங்ளும் ரசிக்க வைக்கின்றன.
சு.பா கூட்டணி ஓகே என்றாலும்
வசனங்களில் செறிவு குறைவு...இந்த இடத்தில் நான் "சுஜாதா"வை miss செய்கிறேன்.

'ஐ' முதல் பாதியில் 'ஐ'யையோ என கதர வைத்தாலும் பிற்பாதியில் ஐதலக்காஐதான்..!but ஷங்கரின் அந்த மேஜிக் மிஸ்ஸிங்.
சினிமா பிரியர்கள் ஒரு தடவை பார்க்கலாம்.'ஐ' மெய்யாலுமே அதுக்கும் மேலதான்..!

4 comments: