Related posts

Breaking News

ஃபெலுடாவின் சாகசங்கள்

சத்தியஜித் ரேயைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்...'பதேர் பாஞ்சாலி' என்னும் திரைப்படத்திற்காக 11 சர்வதேச விருதுகளைப் பெற்றார்(இது இவரது முதல் திரைப்படம்).அதுமட்டுமல்லாமல் வாழ்நாள் சாதனைக்காக ஒஸ்கார் விருது பெற்றவரும் ஆவார்.
இயக்குனரான இவர்  "மெல்லியக்கோட்டுக்கு" அந்த பக்கம் ஒரு புகழ்ப்பெற்ற எழுதாளரும் கூட.இவரது எழுத்தில் 'நைட் ஃஒப் தி இன்டிகோ','டுவன்டி ஸ்டோரீஸ்'  ஆகிய படைப்புக்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை.வங்காள ஷெர்லோக் ஹோம்ஸான 'ஃபெலுடா' எனப்படும் துப்பறியும் கதாப்பாத்திரத்தை சிருஷ்டித்தவரும் இவரே.ஷெர்லோக் ஹோம்ஸ் தந்த தாக்கத்தினால் உருவானவரே ஃபெலுடா என செல்லமாக அழைக்கப்படும் திரு.மித்தர் ஆவார்.ஃபெலுடா தனது ஒன்று விட்ட தமையனான தபேஷ் என்ற சிறுவனுடன் சேர்ந்து துப்பறியும் தொடர்களை 'சந்தேஷ்' என்ற தனது சொந்த பத்திரிகையில் வெளியிட்டார் ரே.ஹோம்ஸ் கதைகளில் எப்படி வொட்சனின் பார்வையில் கதை சித்தரிகப்படுகிறதோ அதே போல் இதில் தபேஷின் பார்வையில் கதைகளின் ஓட்டம் செல்லும்.அவ்வப்போது 'ஜடாயு' என்ற புனைப்பெயர்க்கொண்ட துப்பறியும் எழுத்தாளரும் இவர்களுடன் இணைந்துக்கொள்வார். கொலை,வன்மம் போன்றவற்றை துப்பறியும் கதைகளில் அதிகமாக புனைந்து எழுதும் மலிவான எழுத்தாளர் அல்ல இவர்.மிகவும் "டீசன்டான" முறையில் இவர் எழுதும் கதைகள் மிகவும் சுவாரஷ்யமானவை கூட.

இக்கதைகளில் வரலாற்று சரித்திரப்பெற்ற பல தளங்கள் இடம்பெறும் அதேவேளை புராதன பொருட்கள் பற்றியும் அலசப்படும்.ஃபெலுடாவின் சாகசங்கள் என்ற தலைப்பில் அமைந்த இவ் முப்பதைந்து கதைகளையும் தமிழ்ப்படுத்தி இருக்கிறார் வீ.பா.கணேசன் என்பவர்.மொழிப்பெயர்த்ததனாலோ என்னவோ வசனங்கள் மிகவும் செறிவு கூடியனவாக உள்ளன.35 கதைகளில் நான் படித்த ஒரு சிலவற்றினைப் பற்றி பார்ப்போம்.

டார்ஜிலிங்கில் ஓர் அபாயம்
ஃபெலுடா கதை வரிசையில் இதுதான் முதலாவது கதை.ராஜன் பாபு என்னும் புரதான பொருட்களை சேகரிக்கும் ஒருவருக்கு வரும் ஒரு மிரட்டல் கடிதத்தில் இருந்து தொடங்குகிறது கதை.ராஜன் பாபுவின் போட்டியாளரிடம் இருந்து தன் சந்தேகத்தை தொடங்குகிறார் ஃபெலு பாபு.கதையின் முடிச்சை அவிழ்க்கும் இடம் மிக அருமை.நிச்சயமாக நீங்கள் ஊகிக்க கூட முடியாத ஒருவர்தான் மர்ம கடிதத்திற்கு சொந்தக்காரர்.

மகா ராஜாவின் மோதிரம்    


"லக்னோ"விற்கு சுற்றுலா செல்லும் ஃபெலுடா மற்றும் தபேஷிடம் கிடைக்கப்பெறுகிறது ஒரு புதியவழக்கு.  
ஒளரங்கசிப் மகா ராஜாவிற்கு சொந்தமான விலை மதிப்பற்ற மோதிரம் அதன் தற்காலிக உரிமையாளரிடம் இருந்து திருடப்படுகிறது.திருடனை பல போராட்டங்களின் பின் கண்டுபிடிப்பதே கதை.மொழிபெயர்ப்பு ஒரு சில இடங்களில் என்னை தலை சுற்ற வைத்தது.காரணம் மிகவும் அடர்த்தியான சொற்றொடர்கள்.மற்ற கதைகளுடன் ஒப்பிடும் போது இது ஓகே ரகம் தான்.

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல்

கைலாஷ் சௌதுரிக்கு வருகிறது ஒரு மிரட்டல் கடிதம்...
நிலைமையை நீயே மோசமாக்கிக் கொள்ளாதே! உனக்கு சொந்தமில்லாததை நீ திருப்பித் தந்துவிட வேண்டும். விக்டோரியா நினைவகத்துக்குச் சென்று, அதன் தெற்கு வாயிலை நோக்கியவாறு இருக்கும் அல்லிச் செடிகளின் முதல் வரிசையில் முதல் செடியின் கீழ், அதை வைத்துவிட்டுச் சென்றுவிடு. போலீஸுக்குத் தகவல் சொல்லவோ, தனியார் துப்பறியும் நிபுணரை நாடவோ முயற்சிக்காதே! முயன்றால், உன் வேட்டையின்போது நீ கொன்ற மிருகங்களின் கதிதான் உனக்கும் ஏற்படும்!’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அது தன்னிடம் உள்ள ரத்தினக்கல்லை பற்றித்தான் கூறுகிறது என உணரும் அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையை மீறி தனியார் துப்பறியும் நிபுணரான ஃபெலுடாவின் உதவியை நாடுகிறார்.பின்பு என்ன நடந்தது என்பதே மீதி கதை...பெரிய திருப்பங்கள் இல்லாவிட்டாலும் படிக்கலாம்
 ரத்தினக்கல்லை மறைத்து வைத்திருக்கும் இடம் 'நச்'.

                              ☆☆☆                    

16 comments:

  1. அருமையான பதிவு நண்பா ...

    ReplyDelete
  2. நன்றி நண்ப"ரே"..!

    ReplyDelete
  3. அருமை நண்பர் காவிந்த்

    ReplyDelete
  4. அடிக்கடி எழுதுங்கள் நண்பரே . .

    ReplyDelete
  5. நன்று
    இக்கதைகள் எந்த பதிப்பகத்தின் கீழ்
    வெளிவந்தன??

    ReplyDelete
    Replies
    1. கிழக்கு பதிப்பகம் சிலவற்றை வெளியிட்டுள்ளது...
      Books for children endra pathippakam 20 kadhaikalai veli ittu uladhu...
      try this link
      www.bookconnect.in/collections/all/by-v-b-ganesan

      Delete
  6. கிழக்கு என நினைக்கிறேன் தவறாகவும் இருக்கலாம்

    ReplyDelete
  7. கிழக்கு பதிப்பகம்தான்

    ReplyDelete
  8. 1.டார்ஜிலிங்கில் ஓர் அபாயம் 2மகாராஜாவின் மோதிரம்3 கைலாஷ்சௌதுரியின் மோதிரம்4 அனுபிஸ் மர்மம் 5கேங்டாங்கில் வந்த கஷ்டம் 6 தங்கக் கோட்டை7கல்கா மெயிலில் நடந்த சம்பவம் 8கைலாஷில் ஒரு கொலையாளி9சாவி 10 வங்கப்புலி மர்மம் 11 பூட்டிய பணப்பெட்டி 12 பிள்ளையாருக்கு பின்னே ஒரு மர்மம் 13பம்பாய் கொள்ளையர்கள் 14பிணம் நடந்த மர்மம் 15கல்லறை ரகசியம்

    ReplyDelete
  9. 16 தேவியின் சாபம் 17 மரண வீடு 18மர்மமான ஒரு குடித்தனக்காரர் 19 காட்மாண்டு கொள்ளையர்கள் 20 நெப்போலியனின் கடிதம் 21 டின்டெரட்டோவின் இயேசு 22 அம்பர்சென் மறைந்த மர்மம் 23ஜஹாங்கீரின் மறைந்த மர்மம் 24கேதார் நாத்தில் நடந்த குற்றம் 25 ஆச்சார்யா கொலை வழக்கு 26 மலையில் ஒரு கொலை 27 அப்சரா தியேட்டர் வழக்கு 28 சொர்க்கத்தில் ஒரு ஆபத்து 29 சகுந்தலாவின் நெக்லஸ் 30 லண்டனில் பெலூடா 31வண்ணமுத்தில் விளைந்த மர்மம் 32டாக்டர் முன்ஷியின் டைரி 33 நயன் ஒரு மர்மம் 34ராபர்ட்சனின் வைரம்35 மாய உலகின் மர்மம் ,அனைத்தும் கிழக்கு பதிப்பக வெளியீடே

    ReplyDelete
  10. விரைவில், நீங்களும் உங்களுக்கான தனி கதாப்பாத்திரத்தை உருவாக்குவீர்கள் என நம்புகிறேன்...!!! :) வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா..ஹா..!
      நன்றி..நடக்கவும் நடக்கலாம்

      Delete
  11. Feluda Books 1 to 9 (upto Chaavi) was published by Kizhakku in 2005-6. Thereafter 1 to 20 books in this series were published by Books for Children in 2013. The remaining 15 has to be done.

    ReplyDelete

//]]>