விகடனுக்கு ஒரு கடிதம்

6:49 PM Kavinth Jeev 9 Comments

ஏனோ தெரியவில்லை இதை எழுதியே ஆக வேண்டும் போல் இருந்தது எழுதி விட்டேன்...but யாருக்கு இதை அனுப்...பு...வ...து என யோசித்த போதுதான் தமிழ் மக்களால் அதிகமாக வாசிக்கப்படும் ஒரு இதழுக்கு அனுப்புவோம் என முடிவு செய்தேன்(தப்பி தவறியாவது அவர்கள் கண்ணில் படும் என்ற நப்பா'சைத்தான்').அப்படி என்ன அனுப்பினேன் என்பதை கடிதத்தை(சரியா சொன்னா 'மின்னஞ்சல்') படித்து தெரிந்து கொள்ளுங்கள்(பில்டப் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு போல)..!

சூது கவ்விய தமிழ் சினிமா...

வைப்பது ஒரு முறை என்பதால் ஒரு 'வணக்கம்' வைத்து கொள்கிறேன்.தனியார் பள்ளிகளில் இடம் பெறும் கொள்ளைகளில் இருந்து தண்ணீர் பிரச்சினை வரை பல விடயங்களை அலசியுள்ளது விகடன்...அந்த லிஸ்டில் வர வேண்டிய இன்னொரு விஷயம் தான் இப்பொழுது எடுக்கப்படும் தமிழ் சினிமாக்கள்."நம்ம மிஷ்கின்" படைத்த 'பிசாசு',பதிவுலகில் கொண்டாடப்பட்ட 'பீசா',காலம் கடந்து மக்களுக்கு ஜானம் கொடுத்த 'அன்பே சிவம்' இவையெல்லாம் தரம் வாய்ந்த ஆனால் வணிக ரீதியில் அடி வாங்கிய படங்கள் ஆனால் 'வீரம்','ஜில்லா','கத்தி' போன்ற திரைக்கதையில் ஒரு தர்க்கமும் நியாமும் இல்லாத படங்களே அதிக ஷோக்கள் ஓட்டப்படுகின்றன(கவனிக்கவும் "ஓட்டப்படுகின்றன").அதாவது இதுதான் கமர்ஷியல் என்ற பெயரில் மக்கள் ஏமாறுகின்றனர்/ஏமாற்றப்படுகின்றனர்.'தலைவா' ரீலிஸின் போது வெளியான '555'திரைப்படம் தலைவாவை விட பல மடங்கு நல்ல பொழுதுபோக்கு படம் ஆனால் தலைவாவிற்கு அதிக புள்ளிகளை விகடனே வழங்கியது வேதனைக்குரியது...
காக்க காக்க,வாரணம் ஆயிரம்,வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களை அப்படியே ஒரே படமாக மாற்றி எடுக்கப்பட்ட படமதான் 'என்னை அறிந்தால்'(பல சீன்களை என்னால் ஒப்பிட்டு கூற முடியும்).விகடன் விமர்சனமும் இதைப்பற்றி ஓரளவு கூறியிருந்தது...
எனினும் 'எ.அ' ஒரு தரமான படம் என்பதை போல தான் இருந்தது விகடனின் விமர்சனம்...விகடன்  பல திறமை வாய்ந்த எழுத்தாளர்களை வைத்து கொண்டும் இவற்றை கண்டும் காணதும் போல் இருப்பது..........................!

அம்புட்டுதான்...

After post
என்னை போலவே உங்களுக்கு "மறக்க முடியா" அனுபவத்தை ஏற்படுத்திய படங்கள் இருப்பின் பின்னூட்டமிடவும்.

9 comments:

 1. அருமையான பதிவு பல நல்ல படங்களை பார்க்க விடாமல் செய்கிறார்கள் உதாரணமாக மீகாமன்

  ReplyDelete
  Replies
  1. Welcome to the blog நண்பரே!
   எங்கே இப்பொழுது எல்லாம் தியேட்டரை book செய்துதானே நல்ல படங்களை ஓட்ட முடியும் என்ற கட்டாயம் இதில்...
   அப்புறம் 'மீகாமன்' இன்னும் பார்க்கவில்லை So no comments about that..!

   Delete

 2. ரொம்ப நாளா விகடன் மார்க் பாத்து தான் படம் பார்ப்பது என் பழக்கம், இப்போ அப்படி மார்க் வருவதில்லையே..ஏன் தெரியுமா காவிந்த்..?

  ReplyDelete
  Replies
  1. விகடனே விலைக்கு வாங்க பட்டு விட்டதோ...எனச் சொல்ல தோன்றுகிறது..!
   திருவிளையாடல் Styleல் தொல்வதானால்...

   படிக்க வேண்டியது? விகடன் விமர்சனம்
   படிக்க கூடாதது?அது போடும் மார்க்ஸ்...
   'தெய்வத்திருமகள்' போன்ற copyகளையே புகழ்ந்து தள்ளியவர்களாயிற்றே!

   Delete
 3. இன்றைய காலகட்டத்தில் அனைத்து மீடியாகளும் எல்லா படம்களின் விமர்சனம்களையும் கொடுபதில்லை, ஒருவாரம் 5 படம் வருகிறது என்றால் 1-2 படம்களின் விமர்சனம்களை மட்டும் போடுகிறாக்கள்! இதில் இருந்து தெரியவில்லையா? மீடியா விமர்சனம் எப்படிபட்டது என்று! விகடனை நான் மறந்து வருடம் 7 ஆகிறது!

  போங்க பாஸ் போய் நல்லா படிக்கிற வேலையபாருங்க!

  ReplyDelete
 4. எ.அ, கெளதமின் முந்தய படம்களின் சாயல் இருந்தாலும், ரசிக்கும் படி விறுவிறுப்பாக இருந்ததை ஒத்து கொள்ள வேண்டும்! எனக்கும் மிகவும் பிடித்து இருந்தது!

  ReplyDelete
 5. 3நல்ல படங்களை இணைத்து ஒரு படமாக எடுப்பதற்கும் ஒரு "தனி" திறமை வேண்டும்.ஹா...ஹா...ஹா...!
  //போங்க பாஸ் போய் நல்லா படிக்கிற வேலையபாருங்க!//
  ஆம்,இனி அதைதான் முழு நேர வேலையாக செய்யப்போகிறேன்..!

  ReplyDelete
 6. peetsa - box office hit padam; ottapadum padangal ella kalangalilum undu; copy aditha padangal pattriya thagaval tharpothu udanukudan varuvatharku karanam film industry assistant directors mattrum vaipu kidaikatha pirar enpathu enathu apiprayam; because, than copy adikkum munnare avargal adithu vidargalkale enra athangam (allathu) ore kuttaiyil oorya mattaigal (allathu) pampin kal pamparium enpathaga irukkalam; copy enpathum ella kalathilum irunthathu than; ore thakkam iruppavargal ore mathiri sinthigalam; global net village-il ithu udanukudan therikirathu.
  vikathan vimarisanathilum copy padankal pattri kurippiduvarkal; iran famous director sonnathu pol indian films are filmed like foreign films (screen play); man vasanunaidan eddukum pothu copy varathu (e.g., othiri pookal, mullum malarum)

  ReplyDelete
  Replies
  1. yeah,but...
   தாக்கம் வேறு copy வேறு..!

   Delete