பேட்மேனின் தொடக்கம்[Batman Begins-2005(A Movie Review )]..!

10:06 PM Kavinth Jeev 8 Comments

வணக்கம் நண்பர்களே.,

                                            கிரிஸ்டோபர் நோலன் பேட்மேனை தொட்டதிலிருந்து பலரும் 'அவர்'பற்றியும் இப்படத் தொடர் பற்றியும் பல்வேறு விதமான விமர்சனங்களை எழுதி தள்ளி விட்டார்கள்.ஆனால் இம்முத்தொடரின் முதல் பாகத்தை விடுத்து இரண்டாம்,மூன்றாம் பாகத்தை பற்றியே அதிகமானோர் தமது விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.(ஒருவேளை அவ்விரு பாகங்கள் மட்டுமே தமிழில் 'டப்' செய்யப்பட்டு வெளிவந்தது என்பது கூட காரணமாக இருக்கலாம்).முதல் பாகமான பேட்மேன் பிகின்ஸ் பற்றி அதிகமானோர் பதிவிடவில்லை.இப்பதிவை எழுதுவதற்கு அதுவும் ஒரு காரணம்.இன்னொரு காரணம்(கிரிஸ்டோபர் நோலன் எனக்கு பிடித்தமான இயக்குனர் என்பதல்ல)இப்படத்தின் நாயகனான "கிரிஸ்டியன் பேல்" எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்பதேயாகும்."ப்ருஸ் வெய்ன்" எனும் சிறுவன் பாழடைந்த கிணற்றுக்குள் விழுவது தொடங்கி அவனின் தாய்,தந்தையர் ஒரு கொள்ளைகாரனால் கொலை செய்யப்படுவது வரை பல காமிக் புத்தகங்களிலும் முந்தைய பேட்மேன் படங்களிலும் நாம் பார்த்த விஷயங்களே ஆரம்பத்தில் காட்டப்படுகின்றன.ஆனால் அவை மிகவும் அழுத்தந்திருத்தமாக காட்டப்படுவதில்தான் நோலனின் தனித்துவம் தெரிகிறது.      

B.P:-வரப்போகும் பதிவை நீங்கள் விக்கிப்பீடியாவிலும் காணலாம்.இங்கே இதை எழுதியவுடன் விக்கியிலும் இதை பதிவேற்றிவிட்டேன்.அங்கே ஸ்பாய்லர்களுடன் இன்னும் விரிவாக கட்டுரை காணப்படும்.அதுமட்டுமல்லாது விக்கிக்கு எழுதும் படியால் எழுத்து நடையிலும் சிறுவித்தியாசம் காணப்படும்.

விளையாடிக்கொண்டிருக்கும்  சிறுவன் "ப்ருஸ் வெய்ன்" தவறுதலாக அப்பகுதியில் உள்ள ஒரு பாழுங்கிணற்றுக்குள் விழுந்து விடுகிறான்.அதனுள் வசிக்கும் வௌவால்கள் இவனை கண்டவுடன் தாறுமாறாக பறக்கத்  தொடங்குகின்றன.அவற்றின் கொடூர முகங்களை மிக அருகில் காணும் சிறுவன் பயத்தினால் மிரண்டு போகிறான்.அது அச்சிறுவனின் மனதில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணிவிடுகிறது.பின்னர் ஓர் நாளில் தன் பெற்றோருடன் "மாஸ்க் ஃஒப் த சோரோ" நாடகத்தை பார்க்க செல்கிறான்.நாடகத்தின் இடையில் காட்டப்படும் வௌவால்களைக்கண்டு மன சஞ்சலம் அடைகிறான்.மீண்டும் அவனுக்கு அந்த கிணற்றுக்குள் நடந்த சம்பவங்கள் கண்முன்னே வந்து செல்ல நாடகத்தின் பாதியிலேயே பெற்றோருடன் வெளியேறிவிடுகிறான்.
வரும்  வழியில் ஒரு கொள்ளைக்காரன் இவர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி அவர்களின் நகை,பணம் முதலியவற்றை கேட்க,திரு.வெய்ன் அவர்கள் அதை மறுக்க,திருடன் கையில் இருந்த துப்பாக்கி சாராமாரியாக சுடப்பட சம்பவ இடத்திலேயே பெற்றோர்களை இழக்கிறான் சிறுவன் வெய்ன்."டிம் பெர்டனின்" மட்டமான கற்பனையைப் போல அத்திருடன் ஜோக்கர் எல்லாம் அல்ல.வயிற்றுப் பசிக்காக கொள்ளையடிப்பவன்.ஆனால் போதைப் பொருளுக்கு அடிமையானவன் போலும்.
அதனால்தான் இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றுகிறான்.பல வருடஙகள் உருண்டோடுகின்றன.பதின்ம வயதின் நடுப்பகுதியை எட்டுகிறான் ப்ரூஸ்.கொலைக்குற்றதிற்கான நிரந்தர தண்டனை அளிக்கப்படாமல் இன்னும் அலைகழிக்கப்படுகிறான் அத்திருடன்.ப்ருஸ் "சட்டம் தண்டிக்கும் முன்னதாகவே நான் அவனை தண்டிக்க வேண்டும்" என்ற எண்ணத்துடன் நீதிமன்ற வளாகத்தினுள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்து அவனை கொலை செய்ய யத்தனிக்கிறான்.ஆனால் வேறு ஒரு கும்பல் 'குற்றவாளி'யை தண்டித்து விடுகிறது.ப்ரூஸ் கொலை முயற்சியில் ஈடுப்பட்டதை அறியும் அவனது தோழி(Rachel) "உன் தந்தை உன் செய்கையை நினைத்தால் மிகவும் வெட்கப்படுவார்" என கூறுகிறாள்.இதுவும் அவனது நடத்தையில் பாரிய மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது.தான் இந்நகரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என அக்கணம் நினைக்கிறான்.தனது திறனை விருத்தி செய்யும் முகமாகவும் உலகை வலம் வரும் முகமாகவும் 'பூட்டானு'க்கு செல்கிறான்.அங்கு "ஹென்றி டூகார்ட்" என்பவனை காண நேரிடுகிறது.அவனுடன் பழகும் ப்ரூஸ் விரைவிலேயே டூகார்ட்டுக்கு நெருங்கிய நண்பனுமாகுகின்றான்.ப்ருஸுக்கு தற்காப்புகலைகளை கற்றுதருவதுடன் "லீக் ஒப் ஷேடோவ்ஸ்" என்ற தற்காப்பு கலை அமைப்பிலும் அவனை இணைத்து பயிற்சியளிக்கிறான்.
விரைவிலேயே தற்காப்புகளைகளை நன்றாகக் கற்றுக்கொள்ளும் ப்ரூஸ் அவ்வமைப்பின் நோக்கம் கோதம் நகரை அழிப்பதுதான் என்பதை அறிந்து அதிர்ச்சியும் ஆத்திரமும் கொள்கிறான்.திடசங்கற்பத்துடன் செயற்படும் அவன் அவ்வமைப்பு வளாகத்தை தீயிட்டு கொளுத்துகிறான்.
இத்திடீர் தாக்குதலில் அவ்வமைப்பின் தலைவன் ராஷ்-கல்(நீங்க ராஸ்கல்னே வச்சிக்குஙுக)மாண்டுபோகிறான்.
அதுட்டுமல்லாது இவ்விபத்தில் படுகாயமடையும் தனது நண்பனான ஹென்றியின் உயிரை காப்பாற்றுகிறான் ப்ரூஸ்.தாய்நாடு திரும்பும் அவன் தன் நகரை காப்பாற்றுவதாக உறுதிபூணுகிறான்.இதற்காக அந்நகரின் நேர்மையான போலீஸ்காரரான கமிஷ்னர்.கோர்டான் அவர்களின் உதவியை கோருகிறான்.முதலில் மறுக்கும் அவர் பின் இவனது திடகாத்திர செயல்களைக்கண்டு சம்மதம் தெரிவிக்கிறார்.

இதே நேரம் புதிய நபர் ஒருவன் கோதம்மை பயங்கொள்ளச்செய்கிறான்.அவன்தான் "ஸ்கேயார் க்ரோ"(Scare crow).சாதாரண சாக்கு துணியை முகமூடியாக அணிந்து கொள்ளும் இவன் மனிதர்களின் மேல் ஒரு திரவத்தை ஸ்பேரே செய்துவிடுவான்.அந்த திரவம் தெளிக்கப்பட்ட மனிதர்கள் பயத்தின் எல்லைக்கே சென்று விடுவர்.அவனது காமடியான முகம் அத்தருணத்தின் போது அவர்களுக்கு மிக கொடூரமாகனதாகக் காட்சியளிக்கும்.வசியம் செய்தது போல் தமக்கு தெரிந்த அனைத்து விடயங்களையும் உளறத்தொடங்கி விடுவர்.இவனைப் பிடிக்கும் முதல் முயற்சியில் பேட்மேன் தோற்றுப்போனாலும் இரண்டாவது முயற்ச்சியில் அவனது வழியிலேயே சென்று அவனை மடக்குகிறார்.அவனை விசாரித்து அவனது அடுத்து கட்ட திட்டங்கள் என்ன?அவன் யாருக்காக வேலை செய்கிறான் என்பதை அறியும் பேட்மேனுக்கு தலை சுற்ற தொடங்குகிறது.காரணம் என்ன?அவனது திட்டம் தான் என்ன?அவன் யாருக்காக எந்நோக்கத்துடன் வேலை செய்கிறான்?என்பதை சிறிய டுவிஸ்டுடன் கூறியிருக்கிறார் நோலன்.


திரைக்கதை அமைப்பும் காட்சிகளின் பிரமாண்டமும் இட்படத்தை இன்னொரு லெவலுக்கு இட்டு செல்கின்றன.இதற்கு முன் வந்த பேட்மேன் படங்களிலேயே சிறந்தது எதுவென்று கேட்டால் நிச்சயமாக இப்படத்தைக் கூறலாம்.பேட்மேன் ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.படத்தின் டிரைலர் இதோ..!

A.P:-விக்கியில் உள்ள ஸ்பாய்லர்களுடனான கட்டுரையைக்காண இங்கே க்ளிக்கவும்..!      

8 comments:

 1. சூப்பர் கட்டுரை, கவிந்த். தொடருங்கள்.

  அது என்ன, திடீரென்று பழைய படங்கள் பக்கம் திரும்பி விட்டீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. பழைய படங்கள் என்பதை விட எனக்கு பிடித்தமான படங்கள் என்று சொல்வது பொறுத்தமாக இருக்கும்.இப்படம் வெளிவரும் போது என்வயது 8.
   இதன் இரண்டாம் பாகத்தை வந்த புதிதில் நான் பார்த்திருந்தேன்.ஸ்பைடர் மேன் போல் பெரிதாக ஈர்க்கவில்லை,சமீபத்தில் மீண்டும் பார்த்தேன்...சூப்பராக இருந்தது..!ஆனாலும் ஸ்பைடர் மேனுக்கே என் வாக்கு..!

   Delete
 2. நல்லார்க்கு ககவிந் வாழ்த்துக்கள்
  தொடரட்டும்

  ReplyDelete
 3. அருமை .... எனக்கும் கூட முதல் பாகமும் ,கிரிஸ்டியன் பேலும் மிகவும் பிடிக்கும் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி
   ஹா...அப்படியா!!!

   Delete