Related posts

Breaking News

ஸ்கூபி டூ:Wrestlemania Mystery

வணக்கம் நட்'பூக்களே'...
புதிய வடிவில் எனது வலைப்பூவை மாற்றியமைத்துள்ள கையோடு(மொபைல் ப்ரவுஸர் use செய்பவர்கள் web browserல் சென்று பார்க்கலாம் அல்லது web viewஐ க்ளிக் செய்து பார்க்கலாம்)ஒரு பதிவையும் எழுதிவிடலாம் என தோன்றியது...அதற்கு முன் ஒன்றை சொல்ல வேண்டும்!ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்னரும் நான் வலைப்பூவின் வடிவை(Template) மாற்றியமைத்து இருந்தேன்.ஆனால் பல நண்பர்கள் 'அந்த' வடிவம் பாவிப்பதற்கு அசெளகரியமாக இருப்பதாக கூறினர்...
அதனால் மீண்டும் முற்றிலும் வேறு ஒரு வடிவிற்கு மாற்ற வேண்டியதாக போயிற்று..அதிலிருந்தது போலவே இதிலும் முகநூல் மூலமாகComment செய்யும் வசதியையும் இணைத்துள்ளேன்.புதிய வடிவம் எவ்வாறு உள்ளது என நண்பர்கள் தான் கூற வேண்டும்.சரி நாம் பதிவிற்குரிய விடயத்திற்கு போவோம்.

வார்னர் சகோதரர்கள்(Warner Bros) தயாரிக்க WWE(World Wrestling Entertainment)இணைந்து தயாரிக்க வெளியான அனிமேஷன் திரைப்படம் தான் ஸ்கூபி டூ-Wrestlemania Mystery.

ஸ்கூபி கார்டூன்கள் வழக்கமாக அமானுஷ்ய நிகழ்வுகளையே அடிப்படையாக கொண்டிருக்கும்.அங்கு உண்மையிலேயே அமானுஷ்யம் நிறைந்திருக்கலாம் அது கதையை பொறுத்தது.இக்கதையிலும் அமானுஷ்யம் இருக்கிறது ஆனால் அது சித்து விளையாட்டா? அல்லது மனிதனின் சித்து விளையாட்டா? என்பது திரைக்கதையில்..!ஸ்கூபி மற்றும் ஷாகி ஆகியோர் மல்யுத்த நிறுவனமான WWE நடாத்தும் ஆண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியான Wrestlemania காட்சிக்கான இலவச டிக்கட்டுக்களை அந்நிறுவனம் வெளியிடும் வீடியோ கேமில் ஜெயிப்பதன் மூலம் பெறுகின்றனர்...
அவர்களும் அவர்களது குழுவும் இலவசமாக 'தங்க திங்க' என அனைத்து சலுகைகளும் அந்த வெற்றி வாய்ப்பின் மூலம் கிடைக்கப்பெறுகிறது...
அதேவேளை WWE நகரத்தில் ஒரு அரக்கன் திடீர் திடீர் என தோன்றி பயமுறுத்துகிறான்...
ஐவர் கொண்ட குழுவும் WWE நகரத்தை வந்தடைந்த சில தினங்களிலேயே சிறந்த மல்யுத்த வீரர் இவர்தான் என்பதை பறை சாற்ற மல்யுத்த வீரருக்கு வழங்கப்படும் WWEன் சின்னமடங்கிய தங்கத்திலான இடுப்புப்பட்டி திருடப்படுகிறது.பழி ஸ்கூபியின் மேல் விழுகிறது.ஸ்கூபியை கைது செய்யாமல் காப்பாற்ற வேண்டுமெனில் மல்யுத்த ஜாம்பவானான "கேனை"(கேன இல்ல Kane)மல்யுத்த போட்டியில் ஷாகியும் ஸ்கூபியும்  வீழ்த்த வேண்டும்.அது முடியாத காரணமாகையால் beltஐ திருடிய காரணகர்தாவை அவர்கள் கண்டுபிடிக்க யத்தனிக்கினறனர்.கண்டும்பிடித்தனர்...ஆனால் எவ்வாறு?அது யார்?அரக்கன் என்னவானான்?என்பதே மீதிக்கதை.
ம.யு வீரர்களான ஜோன் சீனா,HHH(Triple H),மிஸ்(Miz),கேன்,சின் காரா(Sin Cara) அப்புறம் AJ Lee ஆகியோரும் கதையில் வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் ஜோன் சீனாவிற்கு ஹீரோ போல(ஸுகூபி டூ கதைகளுக்கு ஸ்கூபி தானே ஹீரோ) வலம் லருகிறார்.

திரைக்கதை வேகமாக பயணிக்கிறது...அதே நேரம் காட்சியமைப்புக்களில் இன்னும் கொஞ்சம் நன்றாக கவனம் செலுத்தியிருக்கலாம்.உதாரணமாக WWE அரங்கத்தை இன்னும் விசாலமாகவும் அழகாகவும் காட்டி இருக்கலாம் அது மட்டுமல்லாமல் 'ப்ரெடி'க்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ஸ் சகிக்க முடிய வில்லை.வழக்கம் போல் கள'வாணி' யாக காட்டப்படுகிறபவர் திரு'டர்' அல்ல.,மாறாக மிகவும் பாவப்பட்ட ஜென்மமாக காட்டப்படுபவர் தான் வில்லன்.
இந்த திரைப்படமானது WWE ஷோக்களை பார்த்து பழகியவர்களுக்கு நிச்சயம் ஒரு
கொண்டாட்டம்தான்...ஏனையவர்களும் சலிப்பின்றி பார்க்கலாம்.
 பட டிரைலர் இதோ...


A.P:- சில நாட்களுக்கு முன் 'ஸ்கூபி டூ' கதையொன்றினை நான் மொழிபெயர்ப்பு செய்து Digital வடிவில் முக நூலில் 'நம்ம' கூருப்புகளில் வெளியிட்டேன் என்பது கொசுறு செய்தி..!

11 comments:

  1. அருமையான தகவல்கள் ..

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள் ..

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி தோழரே...:)

    ReplyDelete
  4. பதிவுக்கு நண்றி கவிந்த்

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் நண்பரே,பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பதிவு ...
    weldone ...

    ReplyDelete

//]]>