WWE-2K15 (Game Review)

6:06 PM Kavinth Jeev 2 Comments


இன்றைய காலக்கட்டத்தில் பல விளையாட்டுக்கள் வெறும் பணம் புழங்கும் ஒரு வஸ்துவாகவே பார்க்கப்படுகிறது.மல்யுத்தமும் இதற்கு விதிவிலக்கல்ல.இவ்வாறான மல்யுத்த உலகின் மிகப் பிரபலமானதொரு நிறுவனம்தான் WWE(World Wrestling Entertainment).கிட்டத்தட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் போன்று அடுத்தடுத்த எபிசோடுகளால்(நம்ம சன் டிவில போடுற சீரியல் மாதிரி இல்லீங்கோ)ரசிகர்களுக்கு 'ஹைப்' ஏற்றுவதுதான் இவர்களது பிரதான வேலை.சில நேரங்களில் இவர்கள் ஒழுங்கு செய்யும் சண்டைகள் கிச்சி கிச்சி மூட்டுவதாக இருக்கும் எனினும் பல வேளைகளில் மிகவும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள்(அதாவது நடுமண்டையில் இருந்து தக்காளி சட்னி ஊற்றெடுத்துக் கொட்டினாலும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மோதிக்கொள்வார்கள்).இந்நிறுவனத்தின் பிரபல்யமான மல்யுத்த வீரர்களாக அண்டர்டேகர்,ரொக்,நம்ம ஜோன் சீனா ஆகியோரைக் குறிப்பிடலாம்.ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பிரதேசங்களில்,மாநிலங்களில்,நாடுகளில் இவர்களது காட்சி நடைபெறும்(சென்ற மாதம் இந்தியத் தலைநகர் டெல்லியிலும் ஒரு காட்சி நடைப்பெற்றது).மாதத்திற்கு ஒரு தடவை முக்கியமான போட்டிகளைக் கொண்ட Pay Per View எனப்படும் சிறப்பு காட்சிகளும் இடம்பெறும்.பெரும்பாலும் இடுப்புப் பட்டிக்காகதான் இவர்கள் அடித்துக் கொள்வார்கள்('பெல்ட' வச்சி என்னதான் செய்வாங்கனு நீங்க கேட்கலாம்.அவையெல்லாம் ஒரு புகழ்/பெருமைக்காகதான்).ஆரம்ப காலம் முதல் 2012வரை THQ நிறுவனம்தான் WWE கேம்களை தயாரித்து,வெளியிட்டு வந்தது.அதன்பின்னர் 2013ம் ஆண்டு முதல் 2K நிறுவனம் இந்த கேம்களை வெளியிடும் அதிகாரத்தை முழுக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டதுடன் THQவுடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.இந்த 2Kயானது கூடைப்பந்து கேம்களை வெளியிடும் ஒரு பிரபல்யமான நிறுவனமாகும்.

2K நிறுவனம்  WWE கேம்களை வெளியிடத்தொடங்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டன.முன்னையதாக இவர்கள் வெளியிட்டிருந்த WWE 2K14னானது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதன் அடிப்படை அம்சங்கள் THQ வெளியிட்ட WWE கேம் சீரிஸின் தன்மைகளையே ஒத்திருந்தன. கிராபிக்ஸ் மற்றும் விஷுவல்கள் நன்றாக விருத்தி செய்யப்பட்டிருப்பினும் புதிய கான்செப்டுகளை புனைவது மிகவும் கம்மியாகத்தான் இருக்கிறது.முக்கியமாக OMG மொமண்டுகள் விருத்தி செய்யப்பட்டிருப்பினும் அதன் கரு THQவிடம் இருந்து சுட்டதே.

 

இதன் கேம்பிளே மற்றும் கன்ட்ரோல்களை பார்த்தோமேயானால்,மிகவும் இலகுவான மூவ்மெண்டுக்களைக் கொண்டமைந்தாகவே அனைத்தும் காணப்படுகின்றன.இதன் சிறப்பு அம்சம் யாதெனில்,ஒரு மல்யுத்த அரங்கினுள் நாம் உட்கார்ந்து சண்டையை ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் அதேவேளை அந்த சண்டையில் ஈடுபடும் வீரர்களையும் நம்மால் கட்டுப்படுத்த முடிந்தால் எவ்வாறு இருக்குமோ அதனைப்போன்ற ஒரு அனுபவத்தினையே இந்த கேம் நமக்கு அளிக்கிறது.2K Showcase Mode

இதனில் இரு கதையம்சங்கள் அடங்கியுள்ளன.
முதலாவது Hustle Loyalty Disrespect எனப்படும் சிம் பன்ங்க்(CM Punk)&ஜோன் சீனா ஆகிய இருவருக்கும் இடையிலான 2013,2014ம் காலப்பகுதிகளில் இடம் பெற்ற மோதல்களை அடிப்படையாகக் கொண்டது.மற்றையது HHH மற்றும் ஷோன் மைக்கல்ஸ் ஆகியோருக்கிடையிலான முரண்பாடுகளை மூலமாகக் கொண்டது(இன்றுவரை இவர்கள் இருவரும் நெருங்கிய சிநேகிதர்கள் என்பது வேறு விஷயம்).

My Career Mode

நாமாக ஒரு வீரரை உருவாக்கி அவரைக்கொண்டு பல பட்டங்களை வென்றெடுப்பதுதான் இந்த மொட்.

இவ்விரு மொட்களையும் முழுமையாக விளையாடி முடிப்பதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய பல வீரர்களை அண்லொக் செய்ய முடியும்.பல பழைய மற்றும் புதிய வீரர்களையும் இந்த கேம் ரோஸ்டரில்(பட்டியலில்) காணக்கூடியதாக இருந்தது.இருந்தும் ஏனோ தெரியவில்லை எவ்வளவு முயன்றும் Paige எனக்கு கிடைக்கவில்லை.

மிகவும் துல்லியமான காட்சியமைப்புக்களைக் கொண்ட இந்த கேம் என் போன்ற மல்யுத்த ரசிகர்களுக்கு பெரும் விருந்துதான்.
இதன் அடுத்த வெர்சனான 2K16 சென்ற வருடமே வெளியிடப்பட்டு விட்டது.எனினும் இவ்விளையாட்டைக் கணிணியில் ஆட வேண்டுமாயின் இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்..!

2 comments:

  1. கவிந்த் உங்களுக்கு கேம்ஸ்ன்னா பயங்கர ஆர்வம் போல, எனக்கு அதுபத்தி ஜீரோ..! தொட்டு பார்த்து கூட கிடையாது..!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா...ஆமாம் நண்பரே...இதுவரை எப்படியும் ஒரு 30 கேம்களாவது விளையாடியிருப்பேன்..!

      Delete