Justice League:An introduction(ஜஸ்டிஸ் லீக்:ஓர் அறிமுகம்)

5:04 PM Kavinth Jeev 4 Commentsஓய்வு நேரங்களை பலரும் பல விதமாக செலவிடுவார்கள்.சிலர் நிறைய வாசிப்பார்கள்,சிலர் திரைப்படங்களைப் பார்ப்பார்கள்.பலருக்கு ஓய்வு நேரம் என்பதே கிடையாது.இன்னும் மிகச் சிலருக்கு அத்தனை மணித்துளிகளுமே ஓய்வு நேரம்தான்.ஆனால் என் போன்றோருக்கு ஓய்வு நேரம் என்பது சற்றே மாறுபட்டது.புத்தகங்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஓவியங்களையும் ரசிக்க முடிந்தால்...... ஆம், காமிக்ஸேதான்.எனக்கு மட்டுமல்ல,உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ப்பவர்களுக்கும் ஓய்வு நேரத்தை கழிப்பதற்கு இதுதான் சிறந்த வழி.இந்த பொழுது போக்கினை தொழிலாகப் பயன்படுத்தி ஆண்டிற்கு ஆயிரமாயிரம் கோடிகளை சம்பாதிக்கும் பல நிறுவனங்கள் உள்ளன.அதில் ஒன்றுதான் DC எனப்படும் Detactive Comics.இன்னும் அழகாகச் சொன்னால் காமிக்ஸ் நிறுவனங்களிலேயே முதன்மையானதும் மூத்ததுமான நிறுவனம்தான் இந்த DC.Major.Malcolm Wheeler-Nicholson


இந்த காக்கி சட்டை காரருக்கும் காமிக்ஸுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.மெல்கம்,1890ல் கீரின்வில்லி என்னும் ஊரில்  பிறந்தார்.பிறந்த நான்கு ஆண்டுகளிலேயே  தனது தந்தையைப் பறிகொடுத்தார்.மெல்கமின் தாய் தன் குடும்பத்தின் நிலைமை கருதி தனது புதல்வர்களுடன் நியுயோர்க்கில் குடியமர்ந்தார்.அங்கே அவருக்கு ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.பின்நாட்களில் பெண்களுக்கான ஒரு பத்திரிகையை திருமதி.வீலர் ஆரம்பிக்கவும் இதுவே காரணமாக அமைந்தது.நாட்கள் கடந்தன.திருமதி.வீலர்,திருமதி நிக்கோல்ஸனாக மறுமணம் புரிந்தார்.அன்றுமுதல் தனது மாற்றாந்தந்தையின் பெயரும் மெல்கமின் பெயரில் இடம்பிடிக்கலானது.சிறுவன் மெல்கம் தனது பால்ய பருவத்தை குதிரை பண்ணைகளில் கழிக்கலானான்.குதிரைச் சவாரியில் கைதேர்ந்தவனானான்.1917ல் அமெரிக்க இராணுவத்தில் இணைந்த மெல்கம்,படையில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதினார்.1925ல் இவர் வீலர்-நிக்கோல்ஸன் என்னும் பெயரில் பதிப்பகம் ஒன்றை தொடங்கினார்.அதில் அவ்வப்போது காமிக்ஸ் ஸ்ஃடிரிப்களையும் வெளியிட்டார்.சுயமாக ஒரு காமிக் பதிப்பு நிறுவனத்தை நிறுவுவதே இவரது கனவாக இருந்தது.1934ல் ஓர் இலையுதிர் காலப்பகுதியில்  National Allied Publications(நேஷனல் அலைட் பப்ளிகேஷன்ஸ்)என்னும் பெயரில் ஒரு காமிக் பதிப்பகத்தை தொடங்கினார்.இவரது இந்த நிறுவனமே பின்நாட்களில் உரிமைமாற்றம் செய்யப்பட்டு டிடெக்டிவ் காமிக்ஸ் என்னும் பெயரில் செயற்படலானது.1937ம் ஆண்டில் தான் முதன்முதலில் டிடெக்டிவ் காமிக்ஸின் பேனரில் புத்தகங்கள் வெளியாகத் துவங்கின.1939ல் பேட்மேனின் வருகையுடன் DCயின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது(அன்றுமுதல் இன்றுவரை டீசியின் விற்பனையை ஏற்றத்தில் வைத்திருக்கும் முக்கியமான நாயகன் பேட்மேன்தான்).


உலகின் முதல் சூப்பர் ஹீரோ என அறியப்படும் சூப்பர் மேனை படைத்தவர்கள் DC காமிக்ஸ் நிறுவனத்தினரே.சூப்பர் மேனது கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஸ்டான் லீ(மார்வல் காமிக்ஸ்) அவர்கள் தோர்,கேப்டன் அமெரிக்கா மற்றும் இன்ன பிற பாத்திரங்களை வடிவமைத்தார்.(சூப்பர் மேனை வைத்து கேப்டன் மார்வல் என்னும் கதாபாத்திரத்தை காப்பியடித்ததாகக் கூறி மார்வல் நிறுவனத்தினர் மீது வழக்கு ஒன்று கூட தாக்கல்படுத்தப்பட்டது).

1939ல் மார்வல் நிறுவனத்தினரின் வருகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பிரபல்யமும் DCயினது விற்பனையை சற்றே தள்ளாடச் செய்தது.சூப்பர் ஹீரோக்களை மட்டும் வைத்து கொண்டு காலம் தள்ள முடியாது என உணர்நத இவர்கள் பல்வேறு வகைகளிலான(விஞ்ஞானப் புனைவு,காதல்,உண்மை சம்பவங்கள்) சித்திரக்கதைகளை வெளியிட்டனர்.இந்த முயற்சி வெற்றியளிக்கவே 1956ல் இவர்களது மிகமுக்கியமான கதாபாத்திரங்களுள் ஒன்றான ஃபிளாஷை ரீபூட் செய்த கையோடு மீண்டும் சூப்பர் ஹீரோக்களை களமிறக்கத் தொடங்கினர்.மார்வல் தக்க வைத்திருக்கும் சந்தையை கைப்பற்றும் பொருட்டு இவர்கள் கையாண்ட உத்திதான் சூப்பர் ஹீரோக்களை குழுவாக இணைந்து அதீத சக்தி கொண்ட வில்லன்களோடு சண்டையிடச் செய்வது.
-தொடரும்

                                                     


4 comments:

 1. முக்கியமான கட்டத்தில்நிறுத்தி விட்டிர்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிவின் சுவாரஸ்யமே அதுதானே..!

   Delete
 2. காமிக்ஸ் ஜாம்பவான்களின் வரலாறு....
  சுவையான நடையில்....
  அடுத்த பதிவு எப்போ...???

  ReplyDelete