Related posts

Breaking News

Justice league:Characters(ஜஸ்டிஸ் லீக்:கதாபாத்திரங்கள்)

1956வாக்கில் ஃபிளாஷ் ரீபூட் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது ஞாபகமிருக்கலாம்.இது வெற்றி பெற்றாலுமே தனித்தனியாக சூப்பர் ஹீரோக்கள் உலகை(அமெரிக்காவை மட்டும்) காக்கும் சப்ஜெக்ட் படிப்படியாக மக்களிடையே அலுப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது.அனைத்து சூப்பர் வில்லன்களுமே ஒரு கட்டத்தில் ஹீரோவிடம் தோற்றுவிடுவார்கள்.இதையே மீண்டும் மீண்டும் எழுதுவது பதிப்பகத்தினருக்கே சலிப்பை ஏற்படுத்தியிருக்க கூடும்.சில வேளைகளில் நான்கைந்து வில்லன்களை ஒரே நேரத்தில் ஹீரோ பந்தாடுவார்.இதனை வைத்து புதிய கான்செப்ட்(கொத்து பரோட்டாதான்) ஒன்றை கொண்டு வந்தனர்.அதாவது தனித்து ஒருவனால் வீழ்த்த முடியாத அதீத சக்தி வாய்நத வில்லன்களை உருவாக்குவது.அவர்களை சூப்பர் ஹீரோக்கள் கும்பலாக சேர்ந்து எதிர்கொள்வது.இறுதியில் நல்லவர்களுக்காக போராடும் ஒருவர் மடியும் அதேவேளை வில்லனும் வீழ்த்தப்படுவார்.இந்த ஃபார்முயூலா காமிக்ஸுகளில் மட்டுமன்றி திரைப்படங்களிலும் இன்றுவரை தொடர்கிறது.

ஆக புதிய கருவை உருவாக்கியாகிவிட்டது.இனி கதாபாத்திரங்களை தெரிவு செய்ய வேண்டும்.புதிதாக கதாபாத்திரங்களை உருவாக்குவதைவிட இருப்பவர்களை வைத்தே கதையை அமைக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.அதற்கமைவாக டீசியின் மிக முக்கியமான கதாபாத்திரங்களைக் கொண்டு 1960ல்Justice laegue Of America(ஜஸ்டிஸ் லீக் ஒஃப் அமெரிக்கா)என்னும் பெயரில் கதைகளை வெளியிடத்தொடங்கினர்.இதற்கு வரவேற்பு அமோகமாக அமைந்தது.இதனை பார்த்த மார்வல் நிறுவனத்தினர் அடுத்த வருடமே(1961) ஸ்டான் லீயின் தலைமையில் Fantastic four(பென்டாஸ்டிக் ஃபோர்)எனும் கதையை வெளியிட்டனர்.பின்னர் ஒரு சுபயோக சுப தினத்தில் ஜஸ்டிஸ் லீக்கை ஒத்த Avengers(அவெஞ்ஜர்ஸ்) என்ற பெயரிலான காமிக்ஸ் வெளியிடப்பட்டது தனிக்கதை.இனி ஜஸ்டிஸ் லீக்கில் அங்கம் வகிக்கும் முதன்மையான கதாபாத்திரங்களைப் பற்றி பார்ப்போம்.

Wonder Women


ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதனால் முதலில் ஒரு பெண் கதாபாத்திரத்துடனேயே தொடங்குகிறேன்.இக்கதாபாத்திரம் 1941வாக்கில் உளவியல் நிபுணரும் எழுத்தாளருமான வில்லியம் அவர்களினால் உருவாக்கப்பட்டது.டீசி யுனிவர்ஸில் பெண்களாலேயே நிர்வகிக்கப்படும் ஒரு நாடு உள்ளது.அதுதான் அமெசான்.அமெசான் நாட்டின் இளவரசிதான் வொண்டர் வுமன் எனப்படும் டயானா.ஆண்கள் என்றாலே அப்படித்தான் என்ற சிந்தனையுடனேயே இந்நாட்டின் பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள்.போதாத குறைக்கு ஆண்கள் படையெடுத்து வந்து அமெசான் நாட்டின் பெண்களை எல்லாம் சிறைபிடிக்க அதனை அந்நாட்டின் அரசி முறியடித்ததெல்லாம் பழைய வரலாறு.ஆனாலும் அனைத்து ஆண்களும் ஒரே போன்று இருக்க மாட்டார்கள் என்பது டயானாவின் எண்ணம்.இவ்வாறிருக்கும் வேளையில் ,இவர்களது நாட்டில் ஒரு ஆண் பலத்த காயங்களுடன் குற்றுயிருமாக குலையுயிருமாக வந்து மாட்டிக்கொள்கிறான்(செத்தாண்டா சேகரு).மயக்க நிலையில் இருக்கும் அவனுக்கு இளவரசி புகலிடம் கொடுக்கிறாள்.நாட்டில் பெண்களில் பலசாலியைக் கண்டறிவதற்கான போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதேவேளை டயானா ஓர் ஆணுக்கு இருப்பிடம் அளித்ததும் தெரிய வருகிறது.போட்டியில் வெற்றிப்பெரும் பெண் அந்த ஆணுடன் வெளியுலகத்திற்கு செல்லும் வாய்ப்பை பெறுவாள்.ஆனால் இதில் டயானாவிற்கு கலந்து கொள்ளவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.மாறு வேடத்துடன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறும் டயானா,தான் காப்பாற்றிய ஆடவனையும் அழைத்துக்கொண்டு வெளியுலகத்திற்கு பயணமாகிறாள்.அதன்பின் அவள் சந்திக்கும் நபர்கள்,பிரச்சினைகள்தான் வொண்டர் வுமன் கதையின் மையக்கரு.இக்கதாபாத்திரம் இரண்டாம் உலக யுத்த்தில் பங்காற்றியதாகவும் எழுதப்பட்டுள்ளது.

அதீத பராக்கிரமத்தை கொண்டவள்.தனது கயிற்றின் மூலம் எப்பேர்ப்பட்ட பொருளையும் தூக்கி கடாசிவிடுவாள்(Lady விஜயகாந்த் என்றால் மிகையாகாது).துணைக்கு ஒரு கேடயத்தையும் வைத்திருப்பாள்.சுருக்கமாகச் சொன்னால் ஆண்களை விட ஆண்மை பொருந்தியதொரு பெண்தான் இந்த வொண்டர் வுமன்.(கேப்டன் அமெரிக்காவுக்கும் இவருக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன.இருவரின் முதல் காமிக்ஸுகளும் கூடவே ஒரே ஆண்டில் தான் வெளியிட்பட்டன).



Superman and Batman



இவர்கள் இருவருக்குமே அறிமுகம் தேவையிருக்காது.சூப்பர் மேன்,உலகின் முதலாவது சூப்பர் ஹீரோ என்ற பெருமைக்கு சொந்தக் காரர்,ஏலியன்.பேட்மேன் ,உலகின் தலை சிறந்த துப்பறிவாளர்களுள் ஒருவர்.இரவின் காவலன்.பேட்மேனை முதன்முதலில் ஓவியமாகத் தீட்டிய போப் கேன் என்பவருடன் பணியாற்றிய தனது அனுபவத்தை பில் ஃபிங்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


"கானேவுக்கு 'பேட்மேன்' என்ற கதாப்பாத்திரத்தைப் பற்றிய யோசனை இருந்தது, மேலும் அந்த சித்திரங்களை நான் பார்ப்பதை அவர் விரும்பினார். நான் கானேவிடம் சென்றேன், மேலும்  அவர் சூப்பர்மேன் போன்றே நல்ல தோற்றத்தைக் கொண்ட கதாப்பாத்திரத்தை வரைந்திருந்தார் அதில் ஒரு விதமான … செந்நிறம் கலந்த உடல் சட்டையை அந்த கதாப்பாத்திரத்திற்கு அணிவித்திருந்தார், மிதியடிகளுடன் கையுறை இல்லாமல், கைக்கவசம் இல்லாமல்  ஒரு சிறிய டோமினோ முகமுடியுடன், கயிற்றில்சுற்றிக்கொண்டிருந்ததைப் போல நான்பார்த்ததாக நினைக்கிறேன். அவர் வரைந்த உருவத்துக்கு வெளியே தெரியும் படி இரண்டு விறைப்பான சிறகுகள் இருந்தன, அது வௌவாலின் சிறகைப் போல காட்சி அளித்தது. பின்னர் அது மிகவும் வெற்றிபெற்ற பேட்மேன் ஆனது" என்கிறார்.(நன்றி:விக்கிமூலம்)

பேட்மேனது கதாபாத்திரத்தில் ஷெர்லாக் ஹோம்ஸினது தாக்கம் நிறையவே இருக்கிறது.
கவனிக்க:இவர்களிருவரும் Justice society of America எனப்படும் Justice League of America(JLA:1960)ன் ஆரம்ப நாட்களில் இடம்பெற்றிருக்கவில்லை.



The Flash


காதலிலே இரண்டு வகை என்பது போல ஃப்ளாஷிலே நான்கு வகை உண்டு அதாவது நான்கு பேர்.Jay Garrick(ஜே கேரிக்)என்பவர்தான் முதாலாவது ஃப்ளாஷ்.கல்லூரி மாணவனான ஜே.கே விஞ்ஞான ஆய்வு கூடத்தில் நீர் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது விபத்திற்குள்ளாகிறான்(Marvel's Amazing Spiderman-2வில் வரும் Electroவை நினைவுபடுத்தி கொள்க).இதன் மூலமாக அவனுக்கு வேகமாக பயணிக்கும் ஆற்றல் கிடைக்கிறது.எத்துனை வேகம் என்றால்,ஒளியையே மிஞ்சும் அளவிற்கான வேகம்.ஆமாம்,அவனால் காலத்தை கடக்க முடியும்.ஜஸ்டிஸ் லீக் ஒஃப் அமெரிக்காவின் மிக முக்கியமான அங்கத்தவன்(JLAவில் ப்ளாஷாக வருவது பெர்ரி ஆலன்).ப்ளாஷை பற்றி மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க.


Green lantern




சென்ற பதிவில்,"சூப்பர் ஹீரோக்களை மட்டும் வைத்துக் கொண்டு காலம் தாழத்த முடியாது என்பதை DC நிறுவனத்தினர் உணர்ந்தனர்" எனக் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.ஆகவே அவர்கள் சூப்பர் ஹீரோ கதைகளுள் விஞ்ஞான புனைவுகளையும் இணைக்க தொடங்கியிருந்தனர்.அப்படி உருவான கதைகளுள் ஒன்றுதான் இந்த கீரின் லேண்டர்ன்(Green Lantern திரைப்படம் தமிழில் மகா சக்திமான் என்று டப்பிங் செய்யப்பட்டது எல்லாம் கண்முன்னே வந்து செல்ல வேண்டுமே).ஒன்றல்ல இரண்டல்ல பல க்ரீன் லேண்டர்ன்கள் உள்ளனர்.பச்சை ஒளியை கக்கும் சக்தி வாயந்த மோதிரத்தை வைத்து கொண்டு உலகை காப்பாற்றுவதுதான் இவர்களது வேலை.முதலாவது க்ரீன் லேண்டர்ன் ஆலன் ஸ்கொட் என்பவர்தான்.ஆனால் ஜஸ்டிஸ் லீக்கில் ஹால் ஜோர்டான் என்பவரை க்ரீன் லேண்டர்னாக ரீபூட் செய்து இருப்பார்கள்.நிறைய க்ரீன் லேண்டர்ன்கள் உள்ளதால் இவரது கதைகள் பலருக்கு போரடிக்கலாம்.ஆனாலும் இன்றுவரை DCயின் மிகச் சிறந்த படைப்புகளுள் இவரும் ஒருவரே.


Martian Manhunter


செவ்வாய் கிரகத்தில் வசிக்கும் ஏலியன்.Erdel(ஏர்டல்)எனும் விஞ்ஞானியின் Teleportal(தொலைவில் உள்ளனவற்றை அருகில் கொணர்தல்,அருகில் உள்ளவற்றை தொலைகடத்தல்) சம்பந்தமான ஆராய்ச்சியின் மூலமாக பூமிக்கு கொண்டுவரப்பட்டவர்.இந்த ஆராய்சியின்போது ஏர்டல் எதிரிகளால் கொல்லப்பட்டு விட இவரும் பூமியிலேயே தங்கி விடுகிறார். தொலைக்கடத்தும் கருவியை சீர்செய்து தனது கிரகத்திற்கு திரும்பும் வரை பூமியில் நிகழும் அக்கிரமங்களை வேரறுப்பதுதான் இவரது நோக்கம்.கிட்டதட்ட மார்வல் காமிக்ஸில் வரும் Vision(விஷன்)னின் அத்தனை சக்திகளும் இவருக்கும் உண்டு(எனினும் விஷனிற்கு பின்னர்தான் இவர் உருவானார்).


Aquaman


இவர்தான் JLAவின் நட்சத்திர ஆட்டக்காரர்.தண்ணீர் மனிதன்.அட்லாண்டிக் கடல் அரசியின் மகன்.இவருக்கு நீரிலும் நிலத்திலும் சுவாசிக்க முடியும்.புல்லட் புரூவ் செய்யப்பட்ட உடம்பு.தண்ணீரை மட்டுமல்லாது அல்லது அதில் வாழும் உயிரனங்களையும் இவரால் கட்டுபடுத்த முடியும்(டெலிபதி மூலம்).இவரை சுருக்கமாக தண்ணீரில் வாழும் சூப்பர்மேன் எனக் குறிப்பிடலாம்.

Cyborg


1980களில் படைக்கப்பட்ட கதாபாத்திரம்.இவரும் JLAவின் ஆரம்ப காலங்களில் இடம்பெற்றிருக்கவில்லை.Teen Titansதான் இவரது புகலிடம்.என்றாலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜஸ்டிஸ் லீக் கதைகளில் இவரது பங்கு தவிர்க்க முடியாதது.விக்(டர்) ஸ்டோன் என்பதுதான் இவரது இயற்பெயர்.விக்கின் பெற்றோர்கள் விஞ்ஞானிகளாவர்.தங்களது அனைத்து பரிசோதனைக்கும் விக் ஸ்டோனையே பயன்படுத்தினர்.இவர்களது பரிசோதனைகள் காரணமாக விக் மாபெரும் ஜீனியஸ்களுள் ஒருவனாக மாறினான்.விஞ்ஞானம் விஷமாக ஆரம்பித்தது இவன்மீது அதிகளவில் ஆராய்சிகளை செய்யப்போக ஒரு கட்டத்தில் மனிதன் பாதி,இயந்திரம் மீதி என்றான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டான்.ஜஸ்டீஸ் லீக் குழுவினர் ஒன்றுகூடும் S.T.A.R Labs(Scientific and Technological Advanced Research Labs)ஸில்தான் இவனது சாதரண வாழக்கை யை தொலைத்தான்.இயந்திர மனிதனான இவனிடம் வித்தியாசமான பல சக்திகள் உள்ளன.கூர்மையான மூளை,பல்வேறுப்பட்ட கம்யூட்டர் ஃபங்ஷன்களை கையாளும் ஆற்றல்,மீள புதுப்பிக்கக்கூடிய அங்கங்கள் மற்றும் பலம் வாயந்த உடல் என்பனவற்றை கூறலாம்.


சூப்பர் ஹீரோக்கள் தயார்.இவர்களுடைய ஆக்ருதைகளுக்கு தீனிப்போடக்கூடிய சமூக பிரச்சினைகளும் சூப்பர் வில்லன்களும் வேண்டுமே...
-தொடரும்


2 comments:

  1. @ கவிந்த்

    கடந்த கமெண்டில் சொன்ன...
    //தமிழில் வார்த்தைகள் ஏராளம் என்பதால் தொடர்ச்சியாக எழுதக்கூடியதாக உள்ளது..! //
    என்னவொரு அருமையான கருத்து...
    அதை உன்வாங்கிய தெளிவை...
    தெள்ளத்தெளிவாக உங்களின் இந்த நீண்டபதிவின் மூலமாக தெரிகிறது.
    [இதுவரையில் போட்ட பதிவிலேயே மிக பெரிய நீண்ட தொடர்பதிவு இதுதானோ..?]

    //என்னை திரும்பி பார்க்க வைத்தவையும் என்னிடம் 'திட்டு' வாங்குபவையும்..!//
    இந்த கோட்பாடும் செம..!தொடருங்கள்..!!


    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.
      ஆம்,நீண்ட பதிவென்பதால்தான் மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டியதாயிற்று.

      Delete

//]]>