Ric Hochet(ரிப்போர்ட்டர் ஜானி):இருளின் தூதர்கள்

2:51 PM Kavinth Jeev 5 Commentsதுப்பறியும் கதைகள் பலவற்றை நாம் படித்திருக்கக் கூடும்.சிறுகதைகள்,நாவல்கள்,குறுநாவல்கள்,சித்திரக் கதைகள் என்று அதன் உலகம் பரந்துபட்டது.துப்பறிதல் என்ற சொல்லை கேட்டவுடன் பலருக்கும் பல கதாபாத்திரங்கள் ஞாபகம் வரலாம்.ஷெர்லாக் ஹோம்ஸ்,கணேஷ்-வசந்த்,பொய்ரட் மற்றும் முதலாவது துப்பறியும் கதாபாத்திரமாக அறியப்படும் ஆகஸ்டே டூபின் என்று இந்த பட்டியல் மிக நீளமானது.காமிக்ஸில் துப்பறியும் மற்றும் சாகஸ கதைகளுக்கு பிரசித்தமானவராக நமது டின்டின்னை சொல்லலாம்.இவருக்கு நிகரான ஒரு துப்பறியும் கதாபாத்திரம்தான நமது ரிப்போர்ட்டர் ஜானி..!


இவருக்கும் டின்டின்னுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.1955ம் ஆண்டில் டின்டின் இதழில்தான் முதன்முதலில் ஜானி தலைக்காட்டினார்.டின்டின் நாய் பிரியர் என்றால் ஜானி பூனை பிரியர்.இருவரும் பத்திரிகை செய்தியாளர்களே.அதுமட்டுமல்லாமல் இருவரது கதைகளை ஒப்பிட்டு பார்த்தால் கூட பல ஒற்றுமைகள் நமக்கு கிடைக்கக் கூடும்.டிபெட் என்பவர்தான் ஜானியின் தோற்றத்தை முதன்முதலில் வரைந்தவர்.ஜானியை மையமாகக் கொண்டு இதுவரை மொத்தமாக 78 ஆல்பம்கள் வெளிவந்துள்ளன.இவரது கதைகள் அனைத்துமே மிகவும் சிக்கலான அமைப்பை கொண்டவை.இறுதி இரண்டு பக்கங்களில்தான் யார்,எதற்கு,எப்போது,ஏன் என்னும் கேள்விகளுக்கான பதில் இருக்கும். அதுவரை சஸ்பென்ஸ்தான்.ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இவரது கதைகளில் உண்டு.

சமீபத்தி்ல் ஒரு பழைய புத்தகக் கடையில் சல்லடை போட்டு தேடியதன் விளைவாக ஜானியின் "இருளின் தூதர்கள்" என்ற புத்தகம் கிடைக்கப்பெற்றது.1997-98 வாக்கில் நமது முத்து காமிக்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகம்.இக்கதை வெளிவரும் போது எனக்கு ஒரு வயது கூட பூர்த்தியாகியிருக்கவில்லை.இன்னுமொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் யாதெனில் மின்னும் மரணம் இதழுக்கான விளம்பரம் மற்றும் இரு வண்ணங்களிலான உட்பக்க டீசர் ஆகியனவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.


                     

இருளின் தூதர்கள்

Cover Photo Credits:Mayavi Siva

முன்னால் திருடர்களாக இருந்த ஒரு சிலர் திருந்தி வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் அவர்களால் தங்களது பழைய தொழிலை மறக்க முடிவதில்லை.ஆதலால் அவர்களாகவே ரகசியமாக சங்கமொன்றை அமைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அதாவது திருடுவது போன்ற நாடகம் மட்டுமே.இந்த சங்கத்தில் நமது ஜானியின் தந்தையாரும் அடக்கம்.அவரும் ஒரு முன்னால் திருடரே.இவ்வாறிருக்கும் வேளையில்,அக்குழுவில் உள்ள ஒரு சிலர் திடீரென மாயமாகி போகிறார்கள்.இதனை துப்புதுலக்க நமது ஜானி கிளம்புகிறார்.இங்குதான் ஆரம்பமாகிறது இடியாப்ப சிக்கல்.கதையின் இறுதி இரு பக்கங்களில்தான் அனைத்து உண்மைகளும் வெளிவருகின்றன.அதுவரை அனைத்தும் மர்மமே.கதை சிக்கலானது என்றாலும் போரடிக்காமல் நகர்கிறது.மெதுவாக நகரும் இடங்களில் ஆக்ஷன் காட்சிகளை இட்டு கதையின் போக்கை சரி செய்து விடுகிறார்கள்.இருப்பினும் ஜானியின் பெஸ்டில் இருளின் தூதர்களுக்கு இடம் கொடுப்பது சந்தேகமே.

ஆக,மனது குழப்பமில்லாமல் சாந்தமாக இருக்கும் சமயங்களில் மாத்திரம் இவரது கதைகளை வாசியுங்கள்.இல்லையெனில்,தலைவலிதான் மிஞ்சும்,என்றாலும் பல சுவாரஸ்யமான கதைகளுக்கு சொந்தக்காரர்தான் Ric Hochet எனப்படும் நமது ரிப்போர்ட்டர் ஜானி..!5 comments:

 1. எனக்கு மிகவும் பிடித்த ஒரு டிடெக்டிவ் நாயகர் ரிப்போர்டர் ஜானி. இந்த கதை நான் படித்ததில்லை. ஆர்வத்தை தூண்டி விடுகிறது உங்களது இந்த விமர்சனம் .

  ReplyDelete
  Replies
  1. ஜானி எனக்கும் பிடித்தமானவரே..!

   Delete
 2. @ கவிந்த்

  அருமையாபதிவு ! கொஞ்சம் கூட பிசிர் தட்டாமல் உள்ளது எழுத்துநடை தொடருங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. @mayavi.siva

   தமிழில் வார்த்தைகள் ஏராளம் என்பதால் தொடர்ச்சியாக எழுதக்கூடியதாக உள்ளது..!

   Delete
 3. @ கவிந்த்

  அருமையாபதிவு ! கொஞ்சம் கூட பிசிர் தட்டாமல் உள்ளது எழுத்துநடை தொடருங்கள்..!

  ReplyDelete