Related posts

Breaking News

Wolverine:Old Man Logan(Comics series review)




"அதீத சக்திகள் கொண்ட நாயகர்கள் அனைவரும் வீழ்த்தப்பட்டு விட்டனர்.அதில் பலர் சாகடிப்பட்டனர்.எஞ்சிய ஒரு சிலரும் தலைமறைவாகிவிட்டனர்.இது சூப்பர் ஹீரோக்களின் காலமல்ல,சூப்பர் வில்லன்களின் காலம்.அமெரிக்கா முழுவதையும் அவர்கள் ஆக்கிரமித்துவிட்டனர்".
இப்படியொரு காலகட்டத்தில் தொடங்கும் கதைதான் Wolverine:Oldman Logan.

X-Men புகழ் Wolverine கதாபாத்திரத்தை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.கட்டுமஸ்தான உடல்,மோப்ப சக்தி,கைகளில் கூராயுதங்கள் இவற்றுக்கு மேலாக காயங்களை ஆற்றும் சக்தி என்று மிகவும் தோரணையாக வடிவமைக்கப்பட்டதொரு கதாபாத்திரம்.இவரின் முதிய வயதில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்தே Mark Miller இக்கதையை எழுதினார்.அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் Wolverine-3யும் Oldman Logan சீரிஸை தழுவிதான் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Story

முதிய வயதில் இருக்கும் லோகன்,தனது குடும்பத்துடன் ஒரு பண்ணையை நடத்தி வருகிறான்.அன்றாட தேவைகளுக்கு கூட போதிய பணமில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் அவன்,எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பிள்ளைகளின் முன் தான் யார் என்பதை காட்டிக்கொள்ளக்கூடாது என்னும் கொள்கையில் உறுதியாக இருக்கிறான்.ப்ரூஸ் பேனரின்(Hulk) சந்ததிகளான Hulk Gang எனப்படுவர்களின் நிலத்தில்தான் அவன் வாடகைக்கமர்ந்துள்ளான்.வாடகை பணம் செலுத்த தவறியதால் Hulk gangயைச் சேரந்தோர் அவனை அடித்து துவைத்துவிடுகின்றனர்.அடிபட்டு கிடக்கும் லோகனை பார்க்க வரும் ஹாக்-ஐ(Hawkeye என்றால் பருந்து போன்ற கூரிய பார்வை உடையவன் என்று பொருள்-Avengers படத்தில் வரும் அதேநபர்தான்)தனக்கு முக்கியமான பொதி ஒன்றை கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அதற்கு வழிகாட்டியாக லோகன் வரும் பட்சத்தில் 500 டொலர்களை அவனுக்கு வழங்குவதாகவும் கூறுகிறான்.உடன்படும் லோகன் அடுத்த நாளே அவனுடன் பயணிக்கிறான்.பயணத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்,ஹாக்-ஐ வந்ததன் உண்மையான நோக்கம் என்பனவற்றை 8 பாகங்களில் விவரிக்கிறது கதை.



கதையில் பல்வேறு விதமான உறவுமுறைகளை பற்றி கூறப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு பீட்டர் பார்க்கரின் இளையமகள்தான் ஹாக்-ஐயின் மூன்றாவது (முன்னால்)மனைவி.இவர்களுக்கு பிறந்த மகளான Ashley என்பவளை காப்பாற்றதான் Hawkeye பயணப்படுகிறான்.அதேபோல்தான் Hulk Gangம்.கதையின் முக்கியமான வில்லன் Red Skullதான்.கேப்டன் அமெரிக்காவை தோற்க்கடித்த பின் கே.அவின் ஆடையுடன்தான் அவன் வலம் வருகிறான்.இவனது அறையில், வீழ்த்தப்பட்ட அத்தனை சூப்பர் ஹீரோக்களின் உடமைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.கிளைமேக்ஸுக்கு முன்னரான சண்டையில் அயன் மேனின் சூட்(Suit)யை அணிந்து கொண்டு லோகன் தப்பிக்கும் காட்சி செம.தனது குடும்பம் Hulk gangனால் அழிக்கப்பட்ட பினனர் லோகன்,வொல்வரீனாக மாறுமிடம் பக்கா ஸ்டைலிஷ்.கிளைமேக்ஸில் ஒரு சண்டையில் Hulkன் உடம்பை கிழித்துக் கொண்டு வருவதெல்லாம் கொஞ்சம் மிகையே.வழக்கமாக வொல்வரீனினது கதைகள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டே எழுதப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு.Mark Millerம் அதற்கு விதிவிலக்கல்ல.ஒரு சூப்பர் ஹீரோ சினிமா எடுப்பதற்கான அத்தனை அம்சங்களும் இப்படத்தில் இக்கதையில் உள்ளன.தனியாக ஒரு திரைக்கதை எழுதும் அவசியம் கூட தேவையில்லை.அவ்வளவு வேகமான கதை.மார்வல் காமிக்ஸ் பிரியர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்.
Fan made Poster


4 comments:

  1. அட்டகாசம் செய்கிறீர்கள். இது விந்த் ஜீவின் நேரம். கலக்குங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. @ கவிந்த்

    கதை சுருக்கத்தை படித்துவிட்டு கடைசியில் அந்த MAY 1 விளம்பரம்...???? அடகடவுளே இந்த படத்தை நான் எப்படி மிஸ் பண்ணினேன்..ஹேய்...நான் விடாமல் X-MAN பார்பவனாக்கும்...இது எப்படி...கிரர்ர்ர்ர்.....

    அட..அது Fan made Poster..ஆஆஆஆ...ஞே...உஸ்ஸ்ஸ்...ஒரு நிமிஷம்...டர்ர்ர்ர்..!

    [கமெண்ட்ஸ் செக்ஷன் ஏன் பாதாளத்துல இருக்கு..???]

    ReplyDelete
    Replies
    1. May அல்ல March மாதம் வெளியிடுவதற்குதான் உத்தேசித்துள்ளனர்.ஆனால் கதைக்களம் இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

      Facebook கொமண்ட்ஸ் load ஆவதால்,blogger க
      கொமண்ட்ஸ் எல்லாம் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுவிட்டன..!

      Delete

//]]>