Related posts

Breaking News

அச்சம் என்பது மடைமையடா-2016


முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு எழுத நினைத்த விமர்சனம்.வைரஸ் கிருமிகள் உடலுக்குள் சென்று கூடாரம் கட்டிவிட்ட படியால் எழுதமுடியாமல் போய்விட்டது.சுடச்சுட பரிமாற நினைத்த சாதம் சற்றே ஆறிப்போன நிலையில்.

கெளதமின் படங்கள் அனைத்தையுமே இரண்டு பிரிவுக்குள் அடக்கிவிடலாம்.ஒன்று Love story இரண்டு Lovely Police story(நடுநிசி நாய்களை படம் என்ற லிஸ்டில் கூட சேர்க்க முடியாது).இந்த இரண்டையும் ஒன்றாக கலந்ததன் விளைவே அச்சம் என்பது மடைமையடா.

கதைக்களம் டீசரிலேயே தெரிந்திருக்கும். நண்பர்களுடன் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும் படித்த வி.ஐ.பிதான் சிம்பு.
ஏற்கனவே காதல் என்ற பெயரில் பல தடவைகள் அடி வாங்கிய சிம்பு தனது முதல் காதலான Royal Enfield உடன் ஒரு பயணம் செல்வதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.இதேவேளை சிம்புவின் தங்கையின் தோழியான லீலா(மஞ்சிமா) அதேவீட்டில் வந்து தங்கவும் இருவரும் பேசிப்பழகி நண்பர்களாகின்றனர்.சிம்புவின் பயணத்தில் மஞ்சிமாவும் இணைந்து கொள்ள பயணம் ஆரம்பிக்கிறது.அந்த பயணத்தில்  ஒரு எதிர்பாராத விபத்து ஏற்பட அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மிகுதி.

கிட்டதட்ட விண்ணைத்தாண்டி வருவாயாவை எட்டிதொடும் அளவில் இருக்கிறது படத்தின் முதல்பாதி.ஆனால் இரண்டிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் இசைதான்.விண்ணைத்தாண்டி வருவாயா படம் ஆரம்பித்த முதல் நொடியிலேயே நாம் படத்திற்குள் சென்று விடுவோம்.ஆனால் இதில் அழுத்தமான பின்னணி இசை மிஸ்ஸிங்.முதல் இரண்டு பாடல்களும் கூடவே காது கொடுத்து கேட்க முடியாத அளவில் உள்ளது.அதன்பிறகு தொடர்ச்சியாக பல பாடல்கள் வருகின்றன.அனைத்துமே செவிகளுக்கு விருந்து.எனினும் 'அந்த' ரஹ்மானின் நடை இதில் இல்லை.தள்ளிப்போகாதே பாடலை மிகவும் சிக்கலான ஒரு இடத்தில் ப்ளேஸ் பண்ணியுள்ளார்கள்.அருமையாக இருந்தது என்றாலும் இன்னும் சற்றே கடினப்பட்டு எடிட் செயதிருக்கலாம்.படத்தில் ரீல் நம்பரை மாற்றிபோட்டுவிட்டார்களோ என்று யோசிக்க வைத்துவிட்டது.இருந்தாலும் பாடல் மற்றும் அதனை வைத்த இடம் அருமை.பாடல் முடிந்த கையோடு படம் வேறு தளத்திற்கு பயணிக்கிறது.

இரண்டாம் பாதி கொஞ்சம் பிசகி இருந்தாலும் முழுப்படத்தையும் மோசமாக்கியிருக்கும்.அதேவேளை இ.பாதியை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் மறக்க முடியாத ஒருபடமாக இது அமைந்திருக்கும்.

சிம்புவின் நடிப்பை குறை சொல்பவர்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்க வேண்டும்.கிட்டதட்ட படம் முழுவதையுமே இவர்தான் கொண்டு செல்கிறார்.குறிப்பிட்ட ஒரு காட்சியில் "என்கிட்டயும் கன் இருக்குடா" என சொல்லிக்கொண்டே சுடும் போது சபாஷ் போட வைக்கிறார்.அந்த இடத்தில் கூட சபாஷ் போடவைக்க வேண்டிய இசை சற்றே நொண்டியடிக்கிறது.இரண்டாம் பாதி முழுவதுமே தள்ளிப்போகதேயில் வரும் ட்யூன்களே நிரம்பியுள்ளன.மீண்டும் மீண்டும் இசையைப் பற்றிச் சொல்லக் காரணம் ரஹ்மானிடம் எதிர்பார்த்த இசை இதில் இல்லாததே.

கதாநாயகி,திரையில் இவரது பங்கு அளப்பறியது,அதை சத்தமில்லாமல் செய்துவிட்டு போயிருக்கிறார்.ஆனாலும் தனிப்பட்ட ரீதியில் இவரது கதாப்பாத்திரம் எனக்கு நிறைவானதாக இருக்கவில்லை.இப்படத்தில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய கதாபாத்திரம் ஒன்று உள்ளது.அதுதான் சிம்புவின் நண்பனாக வரும் மகேஷின் பாத்திரம்.
ஸ்பாய்லர்.
இருந்தாலும் மகேஷிற்கு கொடுத்த இந்த முடிவை மாறறியிருக்கலாம்(ஆமா,அப்ப திவ்யாவின் வாழ்க்கை!??).😓


இரண்டாம் பாதி முழுக்கவே பல குறைகள்(லாஜிக் மீறல்களை புறக்கணித்து விடலாம்).படம் பாதிக்கட்டம் தாண்டிய பின் கதைக்கு அவசியமான பல கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்படுகின்றன.கதையோடு பார்வையாளனை ஒன்றவிடாமல் இது தடுப்பது கண்கூடு.இதைப்போல் இன்னும் பல விடயங்களை மாற்றி எழுதியிருக்கலாம்.

வேட்டையாடு விளையாடு,காக்க காக்க போன்று மறக்க முடியாத அனுபவத்தை தந்திருக்க வேண்டிய படம் பல்வேறு வெளிப்புற,உட்புற சிக்கல்களால் இந்த வெள்ளிக்கிழமையோடு மறந்து போகக்கூடிய ஒரு படமாக அமைந்து விட்டது.

No comments

//]]>