Wonder Woman(2017|3D)-Review

5:54 PM Kavinth Jeev 4 Comments


வொண்டர் வுமன் மற்றும் ஏனைய DC கதாபாத்திரங்கள் பற்றிய எனது கட்டுரையை வாசிக்க இங்கே அழுத்தவும்.

கிரேக்க கடவுளான ஸியுஸ் என்பவர் யுத்தங்களுக்கெல்லாம் அதிபதி ஆவார்.ஸியுஸின் மகனான ஏரிஸ் என்பவன் மனிதர்களையெல்லாம் அழித்து பூமியை கையக்கபடுத்துவதற்காக ஒரு மாபெரும் போரை ஆரம்பித்து வைக்கிறான்.கண்ணில்படும் மனிதர்களையெல்லாம் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறான்.கடவுள்களையும் அவன் விட்டுவைக்கவில்லை.அதேநேரம் தமது சாயலில் படைக்கப்பட்ட தன் குழந்தைகள் அனைவரும் மாண்டுபோவதை விரும்பாத ஸியுஸ் தன் மகனை வீழ்த்தி மனிதர்களை விடுவிக்கிறார்.பிற்காலத்தில் ஏரிஸ் மீண்டு வருவான் என ஊகிக்கும் ஸியுஸ் அவனிடமிருந்து உலகை காப்பதற்காக ஒரு ஆயுதத்தை படைக்கிறார்.அதை அமேஸானியன்கள் பொறுப்பில் ஒப்படைத்து அவர்கள் வாழ்வதற்கென ஒரு தீவையும் உருவாக்கிக் கொடுக்கிறார்.அத்தீவினாது வெளிமனிதர்களின் பார்வையில் இலகுவாக சிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டது.பெண்கள் மாத்திரமே வாழும் அந்த தீவின் இளவரசிதான் டயானா.சிறுவயது முதலே சண்டை பயிற்சிகள் வழஙகப்பட்டு பலம் பொருந்தியவளாக வளர்க்கப்படுகிறாள்.

ஒருநாள்,எதிரிகளிடமிருந்து தப்பியோடும் இராணுவ வீரனான ட்ரெவர் வழி தவறி அந்த தீவிற்குள் வந்து விடுகிறான்.அவனை கைது செய்து விசாரிக்கும் போது அவன் நேச நாடுகளை சேர்ந்த ஒரு ஒற்றன் என்பது தெரியவருகிறது.வெளியுலகில் உலக மகாயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவன் மூலமாக அறிந்து கொள்கிறாள் டயானா.உலக யுத்தத்தை அரங்கேற்றுபவன் ஏரிஸாக இருக்கும் என நினைக்கும் டயானா ஸியுஸின் ஆயுதங்களை தன்னகப்படுத்திக் கொண்டு ஏரிஸை அழிக்கும் நோக்குடன்  அங்கிருந்து ட்ரவரின் உதவியுடன் வெளியுலகிற்கு பயணப்படுகிறாள்.அங்கே அவள் முகங்கொடுக்கும் சவால்கள் என்ன,யுத்தத்தை அவளால் முடிவுக்கு கொண்டுவர முடிந்ததா என்பதை DCக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறது படம்.

Gal Gadot,வொண்டர் வுமனாகவே வாழந்துள்ளார்.இவர் ஒரு இஸ்ரேலிய பெண்மனி.இவரது உச்சரிப்பை கவனித்து பார்த்தீர்களானால் அந்த வித்தியாசத்தை உணர முடியும்.ட்ரெவராக Star Trek சீரிஸ் புகழ் Chris Pine.நடிப்பது தெரியாமல் நடித்துள்ளார்.ஏனையவர்களும் உறுத்தாமல் நடித்துள்ளனர்.

நிறைய நாட்களுக்கு பிறகு ஆங்கில படங்களில்  அருமையானதொரு தீம் மியுசிக்.அத்தனை இடங்களிலும் கச்சிதமாக இசை பொருந்திப் போகிறது. Rupert Gregson-Williamsன் நிறைய படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் வொண்டர் வுமன் வேறு லெவலில் இருக்கிறது.


டயானா மலையில் பாய்ந்தேறுவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.அதை பார்த்தவுடன் பாகுபலி ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.மேலும் நான் பெரிதும் எதிர்பார்த்த Poison Ivy என்ற வில்லத்தனமாக கதாபாத்திரத்தை ஒழுங்காக பயன்படுத்தவில்லை.
அதேவேளை நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வரும் ட்விஸ்ட் ஒன்றும் படத்தில் உள்ளது.

No man's Landல் டயானா கால்பதிப்பது,படத்தின் இறுதி அத்தியாயங்கள் என்பன மிகவும் தனித்துவமான இருக்கின்றன.எனினும் ஏற்கனவே புத்தங்களிலும்,அனிமேஷன் படங்களிலும் வொண்டர் வுமனை பார்த்தவன் நான்.படமும் அதேபோலவே உள்ளது.சின்னஞ்சிறிய மாற்றங்களை செய்திருப்பினும் பெரிதாக படத்துடன் ஒன்ற முடியவில்லை.இத்தனைக்கும் கதை நடக்கும் காலகட்டம்,அவை தரும் உணர்வு என்பன நன்றாகவே இருந்தன.ஆயினும் ஏதோ ஒன்று படத்தின் ஜீவனை கெடுத்துக் கொண்டிருந்தது.அதற்கு நான் படம் பார்த்த அரங்கும் காரணமாக இருக்கலாம்.MC Superiorல்தான் நான் படம் பார்த்தேன்.இறுதியாக அங்கு Fantastic Beasts பார்த்ததாக ஞாபகம். முப்பரிமாணம்,ஒளியமைப்பு,காட்சிகள் என்பன மிக தெளிவாக இருந்தது.ஆனால் இன்று திரையில் முக்கால் பங்கிற்குதான் Resolution அமைத்திருந்தார்கள்.3D கண்ணாடி அணிந்த பின்பும் காட்சிகள் இரண்டிரண்டாக தெரிந்தது.கொடுத்த காசிற்கு வெர்த்தாக இந்த திரையனுபவம் எனக்கு இருக்கவில்லை.இதில் இடைவேளை கூட விடாததால் கண்வலி வேறு.

நல்ல ஒளி,ஒலி தொழிற்நுட்பமுள்ள திரையரங்கில் படத்தை பாருங்கள்.DCயின் பரம விசிறிகளுக்கு கண்டிப்பாக படம் பிடிக்கும்.

A.P:படத்தில் post credit காட்சிகள் இல்லை வீணாக என் போன்று படம் முடிந்தபின்பும் காத்திருக்க வேண்டாம்.மேல விமர்சனத்தில் சில ஸ்பாய்லர்கள் மறைந்துள்ளது.படம் பாரத்தபின் அவை உங்களுக்கு புரியலாம்(அதை நீங்கள் கவனித்து படிக்கும் பட்சத்தில்).

4 comments:

 1. வணக்கம் BRO!! உங்க விமர்சனம் எப்போதும் படிக்கிற ஆள் நான்!! அதுவும் காமிக்ஸ் இல்ல அத பத்தின சினிமா விமர்சனம் எழுதுறது செம!! detailing ஆஹ் எழுத்து கலக்குறீங்க!!!

  நானும் "WONDER WOMEN" படம் பார்த்தேன், என்னதான் மத்த DC படங்களை விட நல்ல இருந்தாலும்...நீங்க சொல்ற மாதிரி ஏதோ மிஸ் ஆன பீலிங்!!!
  முன்னமெல்லாம் English படம் பாக்கிறதுக்கு ஒரு காரணமா இருந்தது அதோட "RUNNING TIME"!! 90 நிமிஷத்துல மொத்தம் படமும் முடிஞ்சிடும்..சும்மா பர...பரனு போகும்!!! இப்பெல்லாம் 2மணி நேரம் ஓடுது!! அதுகூட காரணமா இருக்கலாம்கிறது என் கருத்து!!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ...true words about hollywood movies..!

   Delete