Juetice League(2017-Review)

5:42 AM Kavinth Jeev 2 Comments
Justice League,நான் அதிகம் எதிர்பார்த்த படம்.DC Comics,DC animated Movies,DC Tv series&Animated series என DCயிலேயே மூழ்கி போன எனக்கு Justice League என்றவுடன் ஆர்வம் தாங்கவில்லை.படத்தையும் பார்த்தாகிவிட்டது.

ஒரு வில்லன்,அவனை தனித்து நின்று ஒரு ஹீரோவால் வீழ்த்த முடியாது,ஆகவே பல சூப்பர் ஹீரோக்கள் சேர்ந்து அவனை வீழ்த்துகின்றனர்.DCயின் Justice League தொடங்கி நேற்று வந்த Marvel  Defenders வரை இதுதான் சூப்பர் ஹீரோக்கள் கும்பலாக  தோன்றும் படங்கள் மற்றும் தொடர்களின் மூலக்கதை.கதை இதுதான்,அதை எவ்வாறான திரைக்கதையாக எடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம்.Avengerரா அல்லது Fantastic Fourரா என்பது திரைக்கதையில்தான் உள்ளது.அருமையான கதைகள் பல DCயிடம்தான் உண்டு.Marvelலின் கதைக்கருக்களுக்கு விதை போட்டதே DCதான்.DCயில் கதைகள் பல கொட்டிகிடக்கும்போது அதில் நல்லதொரு கதையைகூட தேர்வு செய்ய முடியவில்லை எனும்போது வருத்தமாக இருக்கிறது.

படத்தில் கதாபாத்திரங்களின் தேர்வு அருமை,அக்வாமேன் முதல் சைபோர்க்,தலைவி வொண்டர் வுமன்,Batfleck😉(Ben Affleck)வரை எல்லோருமே அருமை.நன்றாக நடிக்கவும் செய்கிறார்கள்,ஆனால் அவர்களுக்கான சரியான தீனி படத்தில் இல்லை.அதனால் எந்த கதாபாத்திரத்துடனும் ஒன்ற முடியவில்லை.முக்கியமாக வில்லன்.வில்லன்தான் சூப்பர் ஹீரோ படங்களின் உயிர்நாடி.
படத்தில் வில்லனை பற்றியதொரு பின் ஒளி(Flashbackக்கு தமிழ் அதானே😆) வரும்.அதில் கூட வில்லன் தப்பியோடுவது போல்தான் காட்டப்பட்டிருக்கும்.அதோடு Stepphenwolfன் CGI மகாமட்டம்.பெரியதிரையில் பார்க்கும் போது ஒரு மாதிரியாக இருந்தது.கதாபாத்திர பிண்ணனியில் வலுவில்லை.மேலும் stepphen wolfவை சூப்பர்மேனால் தனியாக வீழ்த்தி விட முடியும் எனும் போது இத்தனை ஹீரோக்கள் எதற்கு என்று தெரியவில்லை.படத்தின் உயிர்நாடி அங்கேயே அறுபட்டுவிட்டது.

இதில் Flashவரும் குறிப்பிட்டதொரு சீன்,X-Men apocalypseல் வருவது போல் அப்படியே நகலெடுக்கப்பட்டிருந்தது வேறு கடுப்பை கிளப்பியது.origin கதைகளை கொண்ட DC இப்படி தடுமாறுவது எதனாலோ...

இசை,அருமையான இசைக்கோப்புக்கள் பல படத்தில் உள்ளன.ஆனால் அவை படம் முடிந்த பின் டைட்டில் கார்ட்டில் மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளது.

வலுவில்லாத திரைக்கதை,டெப்த் இல்லாத கதாபாத்திரங்கள்,ஆங்காங்கே முகம் சுளிக்க வைக்கும் கிராபிக்ஸ் என பல மைனஸ்கள் படத்தில்.இதையும் தாண்டி ரசிக்கவும் சில மொமண்டுகள் உண்டு.எனினும் அவை சிறிது நேரம்தான் தாங்கி பிடிக்கிறது.

பொதுவாக ஒரு திரைப்படத்தை பார்த்து முடிக்கும் போது அது உங்கள் மனதில்  நேரான எண்ணங்களை உருவாக்க வேண்டும்,மாறாக மன அழுத்தத்தை கூட்டி விடலாகாது.Justice League பார்க்கும்போது மன அழுத்தமே அதிகரிக்கிறது.அத்தோடு BvS போன்று அழுத்தமாகவும் இல்லாமல் மிகவும் லைட் வெயிட்டான ஒரு கன்டண்டோடு படத்தை இறக்கியுள்ளார்கள்.
சாக் ஸ்னைடர்,ஜோஸ் வீடன் என மணிமணியாக இரண்டு இயக்குனர்கள் இருந்தும் திரைக்கதையை காப்பாற்ற முடியவில்லை.

படத்தில் ஸ்பெஷலான மொமண்ட்களும் இல்லாமல் இல்லை.டயானா கூறும் கதையில் வரும் போர் காட்சி,அது எடுக்கப்பட்ட விதம் அதன் CG என்பன வேறு லெவலில் உள்ளன.படத்தின் தொடக்கத்தில் வரும் பேட்மேனின் சண்டைகாட்சிகள்,எள்ளி நகையாடும் ஹியுமர் என அங்காங்கே சில நல்ல தருணங்கள் உண்டு.எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது DCEU இன்னும் தடுமாறியேபடியேதான் உள்ளது.

A.P:-படத்தில் இரண்டு போஸ் க்ரெடிட் சீன்கள் உள்ளன.ஒன்று ஜாலியானது.மற்றையது பேட்மேனின் சோலோ மூவிக்கானதொரு லீடை கொடுக்கிறது.

கதைக்குள் கதை என்பதுபோல,இந்த படத்தில் இன்னொரு கதையும் தனியாக உள்ளது.ஒரு சாதரண குடும்பம் ஏலியன் படையெடுப்பின்போது எவ்வாறு ரியாக்ட் செய்யும் என்பது ஒரு பக்கம் தனியாக படமாக்கப்பட்டுள்ளது.எனக்கு அந்த Side Track பிடித்திருந்தது. 

2 comments:

 1. உண்மைய சொல்லனும்னா DC- காமிக்சோடபெரிய விசிறி நான்!! பாதி தெரிஞ்சுக்கிட்டது "DC-யூனிவெர்ஸ்" னு புக்கு மூலமாவும் மீதி உங்க blog மூலமாவும் தான்!!!
  எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் பேட் மேன் தான்!!! செமயான back ஸ்டோரி கொண்ட ஒரு ஆளு அப்பறோம் இந்த ஆளுக்குனு வர்ற வில்லனுக எல்லாரும் செம!!!
  எனக்கு இந்தப்படம் ரொம்ப புடிச்சிருந்தது!!! வில்லன் characteru மொக்க தான் பாஸ்!!! இருந்தாலும் படம் புடிச்சிருந்தது!!!
  நான் மொதல்ல சூப்பர் மேன் கேரக்டர எதுக்குடா கிராபிக்ஸ்ல போட்ருக்கானுகனு யோசிச்சிட்டு இருந்தேன் !! வீட்டுல வந்து படிச்சா தான் தெரிது.. அந்தாளு முயுஞ்சில இருந்த மீசை தாடியெல்லாம் கிராபிக்ஸ்ல எடுத்திருக்கானுகன்னு!!!
  இது ஒண்ணுதான் பாஸ் படத்தில ஒரு மாதிரியா இருந்தது!! மத்தபடி செம படம்

  ReplyDelete
  Replies
  1. இன்னுமே அருமையாக எடுத்து இருக்கலாம்,ஆனால் DC திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் மாயத்தை நிகழ்த்துகின்றன என்பது உண்மை..!

   Delete