Stranger Things-1

3:29 PM Kavinth Jeev 4 Comments


1980கள்,இண்டியானா பகுதியின் ஹாவ்கின்ஸ் நகரத்தில் ஓர் இரவு நேரம்.ஹாவ்கின்ஸிலுள்ள தேசிய ஆராய்ச்சிகூடத்தில் மர்மமான முறையில் ஒரு விஞ்ஞானி தாக்கப்படுகிறார்.அதேவேளை தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீடு திரும்பும் வில் பயர்ஸ் வரும் வழியில் ஏதோ ஒன்றை கவனிக்கிறான்.அங்கிருந்து வேகமாக அகல முயலும் அவன் திடீரென காணமல்போகிறான்.

அடுத்தநாள்,ELEVEN என்ற பச்சை குத்தப்பட்ட,தலையில் கேசங்களற்ற ஒரு சிறுமி பசிக்காக சில திண்படங்களை திருடும் போது கடைக்காரரிடம் அகப்பட்டுகொள்கிறாள்.அவள் பசிக்கு உணவளித்த கடைக்காரர் பின்பு அவளைப்பற்றி சமூகநலன் நிலையத்திற்கு இதை தெரிவிக்கிறார்.
அவ்வுணவகத்திறக்கு வரும் இருவர் கடைக்காரரை கொன்றுவிட்டு அச்சிறுமியை தேடுகின்றனர்.ஆனால் அவள் அவர்கள் வருவதற்குமுன்பே தப்பியோடிவிடுகிறாள்.

வில் பயர்ஸ்ன் அம்மா கவலையுடன் வீட்டில் இருக்கிறாள்.அவளது வீட்டுதொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.அதில் சுரத்தையற்ற தெளிவில்லாத ஒரு குரல் கேட்கிறது.தனது மகன்தான் தொலைபேசியில் தன்னை தொடர்புகொள்ள முயற்சிசெய்கிறான் என அவள் நினைக்கிறாள்.அதன்போது தொலைபேசி மின் ஒழுக்காகி வெடித்துபோகிறது.

வில்லின் நண்பர்களான மைக்,லூகாஸ் மற்றும் டஸ்டின் ஆகியோர் அவனை தேடி காட்டிற்குள் செல்கின்றனர்.ஆனால் அவர்கள் வில்லிற்கு பதிலாக வேறு ஒரு நபரை கண்டுகொள்கின்றனர்.அவள்தான் ELEVEN என்ற முத்திரை குத்தப்பட்ட சிறுமி.


மேல கூறியதுதான் Stranger Thingsன் முதல் அத்தியாயத்தின் சுருக்கமே.ஒரு விரிவான சிக்கலான கதை இப்படி எந்தவொரு பரபரப்பும் அலட்டலுமின்றி ஆரம்பிக்கிறது.

Stranger Things,Netflixல் சென்றவருடம் வெளியான ஒரு தொடராகும்.இது டஃவர் சகோதரர்களின் எழுத்து,இயக்கம் மற்றும் துணைதயாரிப்பில் வெளியான ஒரு இணைய-தொலைக்காட்சி தொடராகும். மினி சீரிஸ் என்பதால் 8 எபிசோடுகள் மாத்திரமே இதனில்.ஆகவே பார்ப்பதற்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளாது. ஒவ்வொரு அத்தியாயமும் கிட்டதட்ட 40-60 நிமிடங்களைக்கொண்டிருக்கும். பெரும்பாலும் அத்தனை அத்தியாயங்களுமே சலிப்பின்றிய நகருகின்றது.

இதன் கதைக்கரு யாதெனில்,ஹாவ்கின்ஸ் ஆராய்சிக்கூடம் அமெரிக்க சக்தி-வள திணைக்களத்திற்கு உதவியாக செய்ற்படுகிறது.எனினும் அவர்கள் அரசுக்கு அறிவிக்காமல் மறைமுகமாக பல ஆராய்சிகளை செய்கின்றனர்.இவர்கள் அசாதாரண சக்திகளை கொண்ட மனிதர்களை வைத்து ஆராய்ச்சிகளை நடத்தும் அதேவேளை வேறு ஒரு ஆராய்சியின் போது Upside-Down எனப்படும் தலைகீழ் பரிமாணத்திற்கான வாயிலை திறந்துவிடுகின்றனர்.நமது பூமிக்கு ஒப்பான ஆனால் பலவகைகளில் மாறுபட்ட ஒரு பரிமாணம்தான் Upside-Down.இவ்வாயிலின் மூலமாக அப்பரிமாணத்திற்கு சொந்தமான சில ஜந்துக்கள் வெளியேறுகின்றன.இவை மனிதர்களை கடத்தி தமது பரிமாணத்திற்குள் கொண்டுசேர்கின்றன.

இதேவேளை அக்கூடத்தில் இருந்து தப்பித்த ELEVEN எனப்படும் EL என்ற சிறுமி வில் பயர்ஸின் நண்பர்களுடன் சேர்ந்துகொள்கிறாள்.இவர்கள் ஒன்றுசேர்ந்து வில் பயர்ஸை கண்டுபிடித்தார்களா,வெளியேறிய ஜந்துக்கள் என்னவாகின,EL என்பவள் யார் அவளது சக்திகள் என்ன என்பதை தொடரை பார்க்க விரும்புவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Netflixசானது தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத இலவசசேவையை அறிவித்துள்ளது.அச்சேவையை ஒரு மாத காலம் நுகர்ந்த பின்னர் நீங்கள் விரும்பினால் தொடர்ந்து பணம் செலுத்தி Netflixஐ உபயோகிக்கலாம்.இல்லையேல் குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள் Unsubscribe செய்து கொள்ளலாம்(இதன்போது கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது).சட்டரீதியான முறையில் தொடர்கள் மற்றும் படங்களை நுகர விரும்புவர்கள் இச்சலுகையை பயன்படுத்தி பார்க்கலாம்.

4 comments:

 1. பார்க்கத்தூண்டும் பதிவு.இணையத்தில் தேடிப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. சீசன் 1-ஐ முழுவீச்சில் ஒரே நாளில் பார்த்து முடித்தேன்!!! இறுதியில் கொஞ்சமா டல்லடிச்சாலும் மொத்தமா சொல்லனும்னா செம சீரிஸ்!!! செகண்ட் சீசன் வேற வந்திடுச்சு!! சீக்கிரமா பார்த்துட்டு சொல்றேன்!!!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக பாருங்க,ஏன்னா அடுத்த சீசன் 2019ல்தானாம்

   Delete