IPL என்னும் உலக சினிமா

1:20 AM Kavinth Jeev 1 Comments


இதோ IPLன் இறுதிபோட்டி நாளை  (27/05/2018) நடைபெறவுள்ளது.நேற்று (25/05/2018) KKRக்கும் SRHக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுவிட்டது.ஆக ஹைதராபாத்தை மூன்று முறை தோற்கடித்த சென்னை அணிக்கெதிராக அவ்வணி களமிறங்கவுள்ளது.இதில் யார் வெற்றி பெறுவார் என நீங்கள் கூட உங்கள் நண்பர்களிடம் விளையாட்டாக பந்தயம் (batting) வைத்திருக்கலாம்.

ஒரு ஐந்து நிமிடம்,உங்களிடம் ஒரு கதை சொல்கிறேன்,வெறும் கதைதான் உண்மையாக நடந்தால் நான் பொறுப்பல்ல

உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் சுற்றுபோட்டி IPL.இரண்டு வருடங்களுக்கு பின்னர் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் விளையாட போகின்றன.ஆக ஏனைய அணிகளைவிட இவ்விரு அணிகள் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.இவற்றுள் மிகுந்த எதிர்பார்ப்பு சென்னை மீதுதான்.இதற்கு CSK மற்றும் தோனி என்ற இரு Branded பெயர்களும் காரணம்.ரஹானேவோ அல்லது ஸ்மித்தோ தலைமை தாங்கும் அணியை விட  தோனி தலைவராக நியமிக்கப்பட்ட அணியை அதிகமானோர் விரும்புவர்.இன்னும் சற்றே பின்னோக்கி போகலாம் நம் கதையில்.

ராஜஸ்தான் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவுஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மீத் அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஒருவர் செய்த தவறுக்காக எட்டு மாதங்கள் அதாவது IPLன்  தாக்கம் முழுதாக முடியும் வரை(மிகச்சரியாக மூன்று மாதங்கள் தடை செய்தால் குட்டு வெளியே தெரிந்துவிடும்) சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள/விளையாட தடை விதிக்கப்படுகிறார்.இப்போது ரஹானே RRன் கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.ராஜாஸ்தான் அணி மீது இருந்த சொற்ப எதிர்பார்ப்பும் இதனால் குறைந்து விடுகிறது.

இங்கே ஒரு கட்.அடுத்த சீன்.இந்த செய்தி கிடைத்தவுடன்,IPLக்கு வெளியே சட்டத்துக்கு புறம்பாக நிறைய செல்வந்தர்கள் battingல் ஈடுபடுகின்றனர்.முதலில் ஒவ்வொரு அணிகள் மீதும் சிற்சிறு தொகைகள் ஒட்டு வைக்கப்படுகிறது.முதல் போட்டியிலேயே மும்பை தோற்கிறது.CSKமீது அதிக எதிர்பார்ப்பு  எழவே இன்னும் நிறைய தரப்பினர் சென்னை அணி சார்ப்பாக bat பிடிக்கின்றனர்.இப்படியே ஒவ்வொரு போட்டியாக செல்ல செல்ல CSK மீது அதிக எதிர்பார்ப்பு.அதிக தொகை bat வைக்கின்றனர்.

இன்னொரு பக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  மும்பை டெல்லியுடன் விளையாடுகிறது.வாழ்வா சாவா என்ற போட்டி மும்பைக்கு.டெல்லி புள்ளி பட்டியலில் கடைசியாக உள்ள அணி.ஆக மும்பை போன்ற பலமான அணியிடம்  டெல்லி எளிதாக தோறகடிக்கப்பட்டுவிடும் என்பதுதான் பலரின் பந்தயமாக இருக்கும்.நீங்கள் கூட அல்லது உங்களை போன்று IPL பார்க்கும் பத்தில் எட்டு பேராவது மும்பை வழக்கம் போல கடைசி நேரம் வெற்றிபெற்றுவிடும் என்றுதானே நினைத்திருப்பீர்கள்.

ஆக பெட்டிங் செய்பவர்களும் மும்பை ஜெயிக்கும் என அதிக தொகை கட்டுகிறார்கள்.சுமாராக ஒரு 50 கோடி என வைத்துக்கொள்வோம்.டெல்லி மீது பணம் கட்டியவர்கள் சொற்ப அளவுதான்.இப்போது டெல்லி ஜெயிக்கிறது.பலமான மும்பை அணி தோற்கிறது.அந்த 50கோடியும் சொற்ப அளவிலான ஒரு சிலரை சென்றடைகிறது(அதாவது அந்த பத்தில் இரண்டுபேருக்கு).
அவர்கள் முதலுக்கேற்ப அதை பிரித்து கொள்கின்றனர்.இங்கே ஒன்றை கவனிக்கவும்,டெல்லி ஜெயிக்கும் என பெட் கட்டியவர்களில் மும்பை அணி வீரர்களோ அல்லது அவர்களின் நிர்வாகத்தினரோ கூட இருக்கலாம்.மும்பை தோற்ற போதும் இவர்களுக்கு நட்டம் இல்லை.

ஏனெனில் மும்பை எப்படி அநியாயமாக தோற்றது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.அதுவும் இலகுவான போட்டிகளில் தோற்று கடினமான போட்டிகளை வென்று இறுதிகட்டத்தில் ராஜாஸ்தானிடம் மண்ணை கவ்வ என்ன காரணம்.சொந்த மண்ணில் நல்ல ஃபார்மில் உள்ள ரோஹிட்டால் ஒரு அரை சதத்தைக் கூட அடிக்க முடியவில்லை.அதுவும் 30 அடி வட்டத்திற்கு வெளிய இரண்டே இரண்டு பிளேயர்கள் மட்டுமே இருக்கும் பவர் ப்ளே ஓவர்களில் கூட,ஃபீல்டர்களின் கைக்கே பிடி கொடுத்து ஆட்டம் இழந்து கொண்டிருப்பார்.இதுதான்  இந்த வருடம் ரோஹித்தின் கதாபாத்திர படைப்பு போலும்.

சரி,கதையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.SRHதான் நம்பர் 1 அணியாக உள்ளது.ஆனால் அந்த அணியையே மூன்று முறை தோற்கடித்து CSK இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடுகிறது.கடைசியாக Qualifier 1ன் போட்டியை பார்த்தீர்களா.சினிமா திருப்பங்களை விட அதிக திருப்பங்களை கொண்டு மிக விறுவிறுப்பாக போட்டி இருந்ததல்லவா.

இங்கே ஒரு கேள்வி அல்லது கதையில் ஒரு முடிச்சு என்று வைத்துக்கொள்வோம்.CSK vs SRH.யார் பலமான அணி என்று கேட்டால் இரண்டையும்தான் கைக்காட்டுவோம்.ஆனால் அதிக எதிர்பார்ப்பு யார்மேல்?கண்டிப்பாக சென்னை மீதுதான்.அதிக விசிறிகளை கொண்ட அணி எது?சந்தேகமேயில்லாமல் சென்னைதான்.ஆக அதிக பணம் எந்த அணியின் மீது கட்டப்பட போகிறது?பத்தில் ஏழுபேரேனும் சென்னை மீதல்லவா பெட் பிடிப்பார்கள்.


  • ஆக ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்வோம்.தலைவர் தோனியோ அல்லது சென்னை அணி யின் நிர்வாகத்தினரோ என்று கூட வைத்துக்கொள்வோம்,சென்னை அணி தோற்கும் என பந்தயம் பிடிக்கிறார்கள்(மறைமுகமாகதான்).பந்தய பணம் 60 கோடி என வைத்துக்கொள்வோம்.இந்த பக்கம் சென்னை அணி வெற்றி பெறும் என வெளிதரப்பினர் அல்லது அப்பாவிகள் அல்லது விஷயமறியா செல்வந்தர்கள்  எல்லோரும் சேர்ந்து 200 கோடி வரை பந்தயம் கட்டுகின்றனர்.இப்போது ஒன்றை மட்டும் யோசித்துபாருங்கள்.200 செல்வந்தர்கள் தலா ஒரு கோடியாக 200 கோடி பணத்தை நட்ட அச்சத்துடன் முதலிட்டு 60 கோடி இலாபத்தை சம்பாரிக்கிறார்கள் என எண்ணிக்கொள்ளுங்கள்.அந்த 60 கோடி பணத்தை 200 ஆக பிரித்து எடுத்து கொள்ள வேண்டும்.ஆக பந்தயத்தில் ஜெயித்தால் மிகச்சிறிய அளவுதான் இலாபம்.

இதையே கொஞ்சம் உள்டா செய்வோம்.இந்த சந்தர்ப்பத்தை கவனியுங்கள்.30 பேர் தலா இரண்டு கோடி பணம் போட்டு மொத்தமாக 60 கோடியை சென்னை தோற்கும் என பந்தயம் கட்டுகின்றனர்.பந்தயத்தில் தோற்றால் 60 கோடி நட்டம் (ஆளுக்கு 2 கோடி) ஆனால் வெற்றி பெற்றால் சுளையாக 200 கோடி இலாபம்(ஒரு தனி நபருக்கே 3 கோடிக்கு மேல் இலாபம்).
அந்த 200 கோடியை முப்பது பங்குளாக பிரித்து கொள்வார்கள்.முதலாவது சந்தர்பத்தை விட இரண்டாவது சந்தர்பத்தில் முதலீட்டாளர்களால் அதிக இலாபத்தை சம்பாதிக்க முடிகிறதல்லவா.

ஆக சென்னை தோற்றால் பந்தயம் பிடித்தவர்களுக்கு நல்ல வருமானமல்லவா.வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை SPOT FIXING செய்து சென்னை தோற்பதற்கு மிக முக்கிய பங்காற்றிய வீரர்களான சின்ன தல பெரிய தலைக்களுக்கெல்லாம் பங்களித்துவிடுவார்கள்.

ஆக IPLல் ஜெயிக்கும் அணிக்கே மொத்தமாக 26 கோடி ரூபாய்(இந்திய மதிப்பில்)தான் கிடைக்கும்.இதில் 12,13 கோடிகளுக்கு ஒரு வீரரை வாங்குவதற்கே செலவழித்துவிடுகின்றனர்.இதில் வீர்களுக்கு செலவு செய்ய வேண்டும்.அத்தனை வசதிகளுக்கும் என எப்படியும் ஒவ்வொரு அணியுமே வெற்றிப்பணத்தை விட பெரிய தொகையை செலவு செய்யப்போகிறது எனும் போது இலாபம் பார்ப்பது எப்படி.பெட்டிங் மூலம்தான்.டெல்லி அணியை வாங்கிய உரிமையாளர் டெல்லி தோற்றதன் மூலமும் சம்பாதிப்பார்(batting) அதே நேரம் ஜெயித்தாலும் சம்பாதிக்கலாம்.

அனைவருக்குமே தெரியும் கோப்பை வெல்லப்போவது ஒரு அணிதான் என்று.பின் ஏன் இவ்வளவு நட்ட அச்சம் உள்ள தொழிலில் அணியின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு முதலிட வேண்டும்.

சாதாரணமான மனிதர்களாகியே நாமே ஒரு நூறூ ரூபாயை முதலிட எவ்வளவு தடவைகள் யோசிப்போம்.வங்கியில் பணம் போட சென்றால் கூட எந்த வங்கியில் வட்டி அதிகம் எதில் வரி குறைவு என ஆராயந்து விட்டுதானே செல்வோம்.ஆக பெரும் முதலாளிகள் முதலிட முன் எவ்வளவு யோசிப்பார்கள் சற்றே சிந்தித்து பாருங்கள்.கண்டிப்பாக ஏதேனும் ஒரு வழியில் இலாபம் காணலாம் என்பதால்தானே.

ஆக ஒரு திரைப்படமாகவோ அல்லது தொடர் நாடகம் போன்றோ IPLஐ பார்ப்பவர்களுக்கு,"இதுல நமக்கு என்னபா இருக்கு,அதான் நல்ல entertainmentடா இருக்குதே" என தோன்றாலாம்.ஆனால் கிரிக்கெட்டை  எந்தவொரு காரணமும் இல்லாமல் வாழக்கையின் ஒரு அங்கமாக நினைக்கும் என் போன்றோருக்கு அதுவும் போலிங் பவர் ப்ளே போன்ற துடுப்பாட்ட வீரருக்கு மட்டுமே சாதகமான முறைகளை அறவே வெறுத்து இன்றும் டெஸ்ட் போட்டிகளை ரசித்து பார்க்கும் எனக்கு இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

இன்னுமொரு சந்தோஷமான விஷயம்.அந்த செல்வந்தர்கள் தொழிலதிபர்கள் அனைவரும் பந்தயம் கட்டி விளையாடிக்கொண்டிருப்பது உங்கள் வரிபணத்தின் ஒரு பகுதியைதான் அது அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம் என தவறாக எண்ணி விடாதீர்கள்.வாழ்க கிரிக்கெட் வளர்க IPL.


1 comment:

  1. உங்களோட பல விமர்சனங்களுக்கு பெரிய ரசிகன் நான்!! ஆனால் ஏனோ இந்த பதிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!! மன்னிச்சுடுங்க BRO!!!

    ReplyDelete