Related posts

Breaking News

Devil May Cry



ஜப்பானின் Capcom எனப்படும் கம்பனியின் வெற்றிப் படைப்புதான் இந்த 'Devil May Cry' வீடியோ கேம். முதன்முதலில் ப்ளேஸ்டேஷன் 2வில் விளையாடும் படியாக 2001ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் இறுதி பதிப்பான DmC வெளியாகி ஐந்து வருடங்களாகும் நிலையில் இதன் புதிய பதிப்பான Devil May Cry:5 அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. 

இந்த கேமீன் பிண்ணனி கதையை பார்ப்போம்.முண்டஸ் என்னும் இராட்சத உலகின் தலைவனை ஸ்பார்ட்டா என்னும் அரக்கன் வீழ்த்துகிறான். அத்தோடு இராட்சத உலகு மனிதர்கள் வாழும் பூமியின் மீது எடுக்கும் படையெடுப்பை முறியடிக்கிறான். மேலும் டீமன்கள் உள்நுழைவதற்காக வடிவமைக்கப்பட்ட வாயில்களை பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் மூடுகிறான்.

பின்னர், மனித உலகிலேயே தங்குவிடும் ஸ்பார்ட்டா எவா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறார். இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறக்கின்றன. டாண்டே மற்றும் வேர்கில் எனப்படும் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். ஒருநாள் ஸ்பார்டாவை பழிவாங்கும் பொருட்டு அவன் துணைவியை முண்டஸ் கொன்று விடுகிறான். இன்னொரு பக்கம்,இச்சம்பவத்தினால் சகோதரர்கள் இருவரும் முரண்படுகின்றனர். வேர்கில் டீமன்களின் பக்கம் சென்றுவிட டாண்டே 'Devil May Cry' எனப்படும் அரக்கர்களை வேட்டையாடும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து நடாத்துகிறான். டாண்டே விதம்விதமாக டீமன்களை வேட்டையாடுவதுதான் கேமீன் கொன்சப்ட்.

ரோல் ப்ளே எக்ஷன் கேமான DMC, டாண்டேவை முதல் மூன்று பாகங்களில் நாயகனாகவும் இறுதியாக வந்த மற்றும் அடுத்து வரப்போகும் பாகங்களில் 'நீரோ' எனப்படும் ஸ்பார்டாவின் "Order of the Sword" எனப்படும் அமைப்பிலுள்ள இளைஞனையும் நாயகனாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. இதில் டாண்டே என்பவன் மிகவும் தெனாவெட்டான, எதற்கும் கவலைபடாத மற்றவர்களை நையாண்டிக்கு உட்படுத்தி எரிச்சலடைய வைக்கும் சிட்டி ரோபோ மாதிரியான ஒரு கதாபாத்திரம் ஆகும்.

டீமன்களை அடிப்பிரித்தெடுப்பது மட்டுமல்லாமல் உங்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் டீமன்களின் மீது காட்டி அமைதியும் கொள்ளலாம் என்பதுதான் இந்த கேமீன் ஸ்பெஷாலிட்டி. நீங்களே டாண்டேவினதும், நீரோவினதும் இடத்தில் இருப்பது போன்ற பிரம்மயை ஏற்படுத்துவதுதான் DMCன் வெற்றி. ஆரம்பகாலகட்டங்களில் இந்த கேம், விளையாடுவதற்கு மிகவும் கடினமானதொன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னைய நாட்களில் மொடிஃவை செய்யப்பட்டது.


இந்த கேமை நீங்கள் விளையாட வேண்டுமெனில் மிகவும் வேகமாக கீ-போர்ட்டை(அல்லது பேட்) கையாளும் நபராக நீங்கள் இருக்க வேண்டும். Playstation,Xbox,Windows மற்றும் இதன் குறிப்பிட்ட ஒரு பதிப்பு IOS இயங்குதளத்திற்கேற்றவாறும் வெளியிடப்பட்டுள்ளது.கேம் பிரியர்கள் மற்றும் மனதில் உள்ள குழப்பங்களை கலைய விரும்புபவர்கள் Devil May Cryயை ஒரு தடவை முயலலாம். உங்கள் ஆர்ச் எனிமையை(பரம எதிரியை) டீமனாக நினைத்துக்கொண்டு அடிபிரித்தெடுக்கலாம்.

No comments

//]]>