Related posts

Breaking News

Star Wars:Rise of the Skywalker (Review in Tamil)


ஸ்டார் வார்ஸ், மார்வல்/ டீசி அளவுக்கு நம் மக்களிடையே இது புகழ்பெறவில்லை. காரணம், இதன் கதை 40 வருடங்களாக தொடர்வதால், மக்களுக்கு கதையை புரிந்து கொள்வது சிக்கலாக இருக்கிறது. ஆனால், கண்டிப்பாக இது நல்ல franchiseதான். கொஞ்சம் ஸ்டடி செய்தீர்களெனில் கதை இலகுவாக புரிந்துவிடும். Trust me! மார்வலை விட இதன் கதை எளிதுதான். நான் ஸ்டார் வார்ஸின் எல்லா படங்களையும் பார்த்ததில்லை. ஆனால் கதையை ஸ்டடி செய்து வைத்திருந்தேன். பொதுவாக எனக்கு ஸ்டார் வார்ஸ் மீது பெரிய நாட்டமில்லை, ஆனால் Solo என்ற ஸ்டார் வார்ஸின் ஸ்பின் ஆஃப் (Spin off) மூவி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஸ்டார் வார்ஸ் கதை தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய எளிய அறிமுகம் (வாசகர்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காக இலகுவான நடையில் எழுதியுள்ளேன்). Palapatine என்ற தீயவன் (Sid) கேலக்ஸியல் உள்ள அனைத்து கோள்களையும் ஆள நினைக்கிறான். அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டான். இவன்தான் மெயின் வில்லன். இவனை எதிர்க்கும் Rebels என்ற நல்லவர்களை ஒடுக்க நினைக்கிறான். மேலும் நல்லவனாக இருந்த Ben என்றவனும் தீயசக்தியால் ஈர்க்கப்பட்டு தீயவர் பக்கம் சேர்ந்து Kylo Ren என்ற பெயருடன் நல்லவர்களை வேட்டையாடுகிறான். கடைசி பாகத்தில் நல்லவர்களெல்லாம் இவனிடமிருந்து தப்பியோடி ஒரு கிரகத்தில் தஞ்சம் புகுந்து விடுவார்கள். இப்போதைக்கு நல்லவர்களுக்கு நம்பிக்கை விடிவெள்ளி Rey என்ற பெண்தான். இவள்தான் இப்போதைக்கு அவர்களை வழிநடத்துகிறவள்.

Rey
Palpatine
Ben/Kylo Ren
இந்த பாகமானது, Kylo Ren மெயின் வில்லனை போட்டுத்தள்ளி அவனே மெயின் வில்லனாகிவிட நினைப்பதுடன் தொடர்கிறது. ஆனால் மெயின் வில்லனோ, “ நீ ரேவை வீழ்த்தி அதன்பின் மெயின் வில்லனாகிவிடு” என்று சொல்லி விடுகிறான். அந்த பக்கம், ரே, Palpatineஐ வீழ்த்த தன் நண்பர் குழாமுடன் பயணிக்கிறாள். இறுதியில் யார் எல்லாம் என்னவானவர்கள் என்பதே கதை. 

இந்த படத்திற்கும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அவற்றை பிறகு வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இப்போது, Rise of the Skywalkersஐ மட்டும் தனியாக பார்ப்போம். இப்படத்தை Lucas Films Production தயாரிக்க J.J.Abrahams இயக்கியுள்ளார். இவர் மிஷன் இம்பொசிபள் சீரிஸ் படங்கள், Star Trek: Beyond மற்றும் ஸ்டார் வார்ஸின் முந்தைய படமான லாஸ்ட் ஜடாய் ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். ரேயாக Daisy Ridley, போவாக ஒஸ்கார் ஐசக், ஃபின்னாக ஜோன் போயேகா என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் குறிப்பாக மூன்று ரோபோட்கள் இந்த படத்தில் உள்ளன. அதில், C-P3O என்ற ட்ராய்ட் ரோபோவின் குறும்புத்தனம் நன்றாக இருந்தது.

Palpatineஐ தேடிக்கண்டுப்பிடித்து அழிப்பதுதான் கதை. வெறும் பத்து நிமிட கதையை கிட்டதட்ட இரண்டரை மணித்தியாலங்களுக்கு சொல்லியுள்ளார்கள். ஆனால் எனக்கு படம் போரடிக்கவில்லை, டெர்மினேட்டர்: ஜட்ஜ்மண்ட் டே பாணியில் அடுத்தடுத்து அக்‌ஷன் சீக்வன்ஸ்கள் வந்து கொண்டே இருந்தன. இதற்கு மேலும் நான் கதையை சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும் (ஸ்பாய்லர் உள்ள அலசலை வேறொரு கட்டுரையில் பார்ப்போம்).

படத்தின் மேக்கிங் முதற்தரம், பிசிறு தட்டாமல் சிறப்பாக செய்துள்ளார்கள். படத்தில் நிறைய கோள்களையும் வித்தியாசமான ஏலியன் உயிரனங்களையும் காட்டுகிறார்கள். அனைத்துமே கிரியேட்டிவாக ரசிக்கும்படி உள்ளன. நடிகர்கள் அனைவருமே தம் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இசை, என்னை பொறுத்தவரை பரவாயில்லை ரகம். 

படத்தில் சில பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. Predictable Flow படத்தின் ஒரு மைனஸ், ஆனால் கிளைமேக்ஸில் சில எதிர்பார திருப்பங்களும் உள்ளன. அவற்றை முழுமையாக நான், நியாமான திருப்பங்கள் என்று வரையறுக்க மாட்டேன். படத்தின் அடுத்த பிரச்சினை, முன்னரே கூறியது போல பத்து நிமிட கதையை வைத்து சுத்தி திரைக்கதை எழுதியதுதான்.  மேலும், ஏழு கடல் தாண்டி, பல மலைகளை தாண்டி, குகைக்குள் இருக்கும் கிளியை கண்டுபிடித்து அதன் இதயத்தில் பதுங்கி இருக்கும் அசுரனை வதைக்கும் அதே கதைதான். பொதுவாக திரைக்கதைகளை அப்படித்தான் எழுத வேண்டும், ஆனால் இதில் வேண்டுமென்றே சுற்ற வைப்பது தனியாக தெரிகிறது.

மற்றபடி, ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கொடுக்கக் கூடிய தரமான படமாக Rise of The Skywalkerஐ சொல்லலாம். மேலும், ஒரு முக்கியமான விஷயம், நான் ஸ்டார் வார்ஸ் பற்றி அறிந்திருந்ததால் படத்தை என்ஜாய் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் என்னுடன் வந்த நண்பர் கதை முன் கதை தெரியாததால் சலிப்படைந்து விட்டார். நான் அவ்வப்போது கதையை அவருக்கு Live Commentary செய்து கொண்டிருந்தேன், இருப்பினும் படத்துடன் அவரால் ஒன்ற முடியவில்லை. ஆகவே, முன்கதை தெரிந்து படத்தை பார்க்கச் செல்லுங்கள். 

A:P:- ஸ்டார் வார்ஸ் பற்றிய விளக்கக் கட்டுரைகள் ஏதேனும் வேண்டுமெனில், Comment செய்யுங்கள். நீங்கள் எதை கேட்கிறீர்களோ அதை பற்றி எழுதுகிறேன். 

அல்லது கட்டுரைகள் outdated என்பதால் யூடியுப் பக்கம் தாவி விடலாமா?

No comments

//]]>